விரைவில் இசைக் கல்லூரி தொடங்குவேன்: இசையமைப்பாளர் இளையராஜா

விரைவில் இசைக் கல்லூரியைத் தொடங்க உள்ளதாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தனது பிறந்த நாள் விழாவில் திரைப்பட இசையமைப்பாளர்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இளையராஜாவின் பிறந்த நாள் விழாவில், அவருக்கு மாலை அணிவித்த பல்கலைக்கழக துணைவேந்தர் வி.முருகேசன்,
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இளையராஜாவின் பிறந்த நாள் விழாவில், அவருக்கு மாலை அணிவித்த பல்கலைக்கழக துணைவேந்தர் வி.முருகேசன்,


விரைவில் இசைக் கல்லூரியைத் தொடங்க உள்ளதாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தனது பிறந்த நாள் விழாவில் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறை சார்பில், இளையராஜாவின் 75-ஆவது பிறந்த நாள் விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. பல்கலை. நுண்கலைப் புல முதல்வர் கே.முத்துராமன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:
அண்ணாமலைப் பல்கலை. சாஸ்திரி அரங்குக்கு இரண்டாவது முறையாக வந்துள்ளேன். இதற்கு முன்பு கெளரவ டாக்டர் பட்டம் பெற வந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் அமைந்துள்ள மற்றுமொரு கோயிலாகும். இது, புனிதமான இடம்.
பாடல்கள், இசையின் மூலம் மனிதனுக்கு சுத்தமான ஆற்றல் கிடைக்கிறது. இசையின் மூலம் பல்வேறு அதிசய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இது இசையின் மகத்துவம் என்றார் இளையராஜா. தொடர்ந்து, மாணவர்கள் கேட்ட கேள்விக்கு இளையராஜா பதிலளித்தார். 
அப்போது, மாணவர் ஒருவர், நீங்கள் இசையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? எனக் கேட்டார். அதற்கு, இசையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. இசைதான் என்னைத் தேர்த்தெடுத்தது என்றார்.
வெளிநாடுகளில் இசைக் கச்சேரிக்கு சென்றபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து மற்றொரு மாணவர் கேட்ட போது, அங்கே நடைபெறும் இசை நிகழ்ச்சியின்போது அமைதி, ஒழுக்கம், கட்டுப்பாடு காணப்பட்டது என்றார். 
இசைக் கல்லூரி தொடங்குவீர்களா? என்ற கேள்விக்கு, அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளேன். விரைவில் இசைக் கல்லூரி தொடங்கப்படும் என்றார் அவர்.
முன்னதாக, பல்கலை. துணைவேந்தர் வி.முருகேசன் தலைமை வகித்துப் பேசியதாவது: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு 90-ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழாவாக இளையராஜாவின் பிறந்த நாள் விழா நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் அவரது இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதியளித்தால், அதில் வரும் தொகையை வைத்து பல்கலை. இசைக் கல்லூரியில், இளையராஜா பெயரில் இருக்கை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் ஆண்டுதோறும் இசை வல்லுநர்கள் கெளரவிக்கப்படுவார்கள் என்றார் அவர்.
இந்த வேண்டுகோளை ஏற்ற இளையராஜா, பல்கலை. 90-ஆவது ஆண்டு விழாவில் இசை நிகழ்ச்சியை நடத்த ஒப்புதல் அளித்தார்.
பல்கலை. பதிவாளர் எம்.ரவிச்சந்திரன் வாழ்த்திப் பேசினார்.
தொடர்ந்து, சாஸ்திரி அரங்கில் மாணவர்கள் மத்தியிலும், துணைவேந்தர் வி.முருகேசன் முன்னிலையிலும், இளையராஜா கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். விழாவில் தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி ராம.சந்திரசேகரன், தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் எம்.அருள், மக்கள் - தொடர்பு மேலாளர் காளிதாஸ், பல்கலை. புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, பல்கலை. இசைக் கல்லூரி மாணவர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆங்கிலத் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் எம்.தமிழ்த்தென்றல் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com