தமிழ்நாடு

கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்: சூர்யாவிற்கு இயக்குநர் பா.இரஞ்சித் ஆதரவு 

DIN

சென்னை: கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார் என்று கல்விக்கொள்கை சர்ச்சையில் நடிகர் சூர்யாவிற்கு இயக்குநர் பா.இரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை சென்னையில் சிவக்குமார் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், 20 வருடங்களாக நான் நடித்துக்கொண்டிருப்பதால் நான் பேசினால் பார்ப்பார்கள், கேட்பார்கள் என்பதால் சொல்கிறேன். எல்லோருடைய கோபம், அச்சம் என்னவென்றால் மீண்டும் மீண்டும் தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு போன்றவற்றில் உள்ள கவனம் சமமான, தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதில் செய்யப்படவில்லை என்பது. சமமான, தரமான கல்வியைக் கொடுக்காமல் தகுதியான மாணவனை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? 

நாங்கள் 10 வருடங்களாக மாணவர்களைப் பார்த்து வருகிறோம். 10 வருடங்களாக 30% மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். 30% +2 மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படி நீட் எழுதுவார்கள்? எல்லாத் தேர்வுகளையும் தூக்கிப்போட்டுவிட்டு ஒரே ஒரு நுழைவுத் தேர்வு வரும். அதை எழுதினால் தான் எந்த டிகிரியாக இருந்தாலும் போகமுடியும். நீட் தேர்வு சமூகத்தின் சமநிலையை மாற்றுகிறது. தேர்வுப் பயிற்சி மையங்களின் ஆண்டு வருமானம் ரூ. 5000 கோடி. எட்டாவதிலிருந்து தேர்வுகளை எழுத பயிற்சி மையங்கள் தேவைப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படிப் படிப்பான்? இவ்வளவு நுழைத்தேர்வுகள் இருந்தால் எங்குச் சென்று படிப்பார்கள்? 

எல்லோரும் தயவு செய்து விழிப்புணர்வுடன் இருங்கள். கல்வியாளர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், ஊடகங்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்காகப் போராடும் சங்கங்கள் என அத்தனை பேரும் விழித்துக்கொள்ளவேண்டும் என்று பேசியிருந்தார். 

இந்நிலையில் கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார் என்று கல்விக்கொள்கை சர்ச்சையில் நடிகர் சூர்யாவிற்கு இயக்குநர் பா.இரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

புதியகல்வி கொள்கை பற்றி #சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். சிறுபான்மையினர்,பெண்கள் ,மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும், பேசியும், செயல்பட்டு வரும்  @Suriya_offl நாம் துணை நிற்போம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT