தமிழ்நாடு

பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை

DIN


தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டில் கல்விக் கட்டண உயர்வு இல்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில், பொறியியல் கல்விக் கட்டண உயர்வு செய்ய அனுமதி கேட்டு தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சார்பில், நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையிலான கட்டணக் குழுவிடம் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 
இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகம், அதன் 4 பிரிவுகள் மற்றும் 13 உறுப்புக் கல்லூரிகளுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கட்டணத்தை நிகழாண்டில் உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணமும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல் நாள் கலந்தாய்வை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த உயர்கல்வித் துறை அமைச்சரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்ததாவது:
விலைவாசி உயர்வைக் காரணம் காட்டி, கல்விக் கட்டண உயர்வு கோரி சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கட்டணக் குழுவிடம்  மனு அளித்திருந்தன. 
ஆனால், சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கல்விக் கட்டணம் மாற்றியமைக்கப்படும். எனவே, நிகழாண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. அந்தக் கல்லூரிகளில் ஏற்கெனவே உள்ளதுபோல அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் ரூ. 55,000 மட்டுமே கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
நிகழாண்டில், அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 பிரிவுகள் மற்றும் அதன் 13 உறுப்புக் கல்லூரிகளுக்கு மட்டுமே கல்விக் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 9 ஆயிரம் என்ற அளவில் இருந்த கல்விக் கட்டணம், தற்போது ரூ. 15 ஆயிரம் என்ற அளவில் உயர்த்தப்பட்டிருக்கிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT