தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்: நாகர்கோவில் கூட்டத்தில் ராகுல் உறுதி   

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்று நாகர்கோவிலில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.  
தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்: நாகர்கோவில் கூட்டத்தில் ராகுல் உறுதி   

நாகர்கோவில்: தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்று நாகர்கோவிலில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.  

விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ் , மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. கடந்த ஞாயிறு அன்று நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், திமுக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற முதல் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புதனன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

இந்த கூட்டத்தில் உங்கள் முன் பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்.

கருணாநிதி மறைந்தாலும் அவரது கொள்கை தமிழகத்தை எப்போதும் வழிநடத்திக் கொண்டிருக்கும்.

கருணாநிதியை நான் சில தடவைகள் சந்தித்திருந்தாலும் அவருடன் அதிக நேரம் செலவழிக்க இயலவில்லை.

திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல; மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் கூட்டணியாகும்.

தமிழ் கலாசாரத்திற்கும் தமிழ் மொழிக்கும் பிரதமர் மோடியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

2019 தேர்தல் முடிவுகளில் தமிழர்களின் உணர்வுள் பிரதிபலிக்கும். 

தமிழ்நாட்டில் பாஜகவின் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

ஆட்சிக்கு வந்த பிறகு மோடி மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அழுத்தம் கொடுக்க முயல்கிறார். ஆனால் தமிழகத்தில் அவ்வாறு செய்ய இயலாது.

தமிழகத்தில் விவசாயிகள் அனுபவிக்கும் சிரமங்களை தில்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டங்களின் போது நானே நேராக பார்த்தேன். 

மாநிலங்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 3 மாதங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம்

பிரதமர் மோடி பணக்காரர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருகிறார்

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறினார், ஆனால் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாடு வேலையில்லா திண்டாட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது

திருவள்ளுவர் கூறியது போல உண்மை எப்போதும் வெல்லும். அப்படி உண்மை வெல்லும் போது மோடி சிறையில் இருப்பார்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இப்போதுள்ளகொள்ளை வரி போல அல்லது நாடு முழுவதும் ஒரே மாதிரியான, எளிமையான ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டை உற்பத்தி மையமாக கொண்டு வருவதற்கான முயற்சிகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம். 

உலக அரங்கில் ஆக்கிரமித்திருக்கும் சீன பொருட்களுக்கு மாற்றாக 'தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது' என்னும் பெயர் நிலைத்திருக்கும் படி இந்தியாவை முன்னிறுத்துவோம்.   

தமிழகத்தில் உள்ள இளம் தொழில் முனைவோர்களுக்கு வாங்கி மூலம் கடன்கள் வழங்கப்படும். 

ஏழை எளிய மக்களுக்கு குறைந்த பட்ச வருமானம் உறுதி செய்யப்படும் திட்டம் கொண்டு வரப்பப்டும். 

இங்கு புயல் பாதிப்பு ஏற்பட்ட போது நான் வந்து பார்வையிட்டேன். மீனவர்களுக்கு உதவும் பொருட்டு தனி அமைச்சரவை உருவாக்கப்படும்  

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு சட்டமாக இயற்றப்படும்.

அதேபோல மத்திய அரசுப் பணிகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க ஆவண செய்யப்படும்.

நமக்கு வெவேறு கருத்துகள் குரல்கள் இருந்தாலும் மோடிமற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை வீழ்த்த வேண்டும் என்பதில் ஒருங்கிணைந்து செய்லபடுவோம்,

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com