தேர்தல் பிரசாரத்துக்கு வருவார், ஆனால் பேச மாட்டார்: ஒரு முக்கியக் கட்சித் தலைவர் குறித்து தகவல்

தேர்தல் பிரசாரங்களுக்குக் கட்சித் தலைவர் வருவார், ஆனால் பிரசாரத்தில் பேச மாட்டார் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்துக்கு வருவார், ஆனால் பேச மாட்டார்: ஒரு முக்கியக் கட்சித் தலைவர் குறித்து தகவல்


சென்னை: தேர்தல் பிரசாரங்களுக்குக் கட்சித் தலைவர் வருவார், ஆனால் பிரசாரத்தில் பேச மாட்டார் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் தெரிவித்துள்ளார்.

இது எந்த கட்சித் தலைவரைப் பற்றி எந்த துணைப் பொதுச் செயலாளர் சொன்னது என்பது நிச்சயம் உங்களுக்குப் புரிந்திருக்கும். சொல்ல வேண்டியதில்லை என்று தான் நினைக்கிறேன்.

சரி நேராக விஷயத்துக்கு வருவோம், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தேமுதிக துணைப் பொதுச் செயலர் சுதீஷ் பேட்டி அளித்துள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது, பாஜகவுடன் கூட்டணியில் இணைவதில் எந்த தடையும் ஏற்படவில்லை. நாங்கள் கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கவில்லை. ஆனால், நாங்கள் விரும்பியத் தொகுதிகள் கிடைத்ததால் அதனை ஏற்றுக் கொண்டோம் என்று இழுபறி நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில்லாமல், பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் எங்களுக்கு அக்கட்சி சில வாக்குறுதிகளை அளித்து, மீண்டும் பாஜக  தலைமையிலான ஆட்சி அமைந்ததும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் சென்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பார். ஆனால் பேச மாட்டார்.

அவர் தொகுதி வாரியாக பிரசாரத்துக்கு வந்தாலே போதும். கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியும், எழுச்சியும் அடைவார்கள் என்று கூறினார் சுதீஷ்.

நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என்ற கேள்விக்கு, வேட்பாளர்கள் குறித்து விஜயகாந்துதான் முடிவு செய்வார். நான் போட்டியிடுவது குறித்தும் அவரே இறுதி முடிவு எடுப்பார் என்றும் சுதீஷ் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com