பாதுகாப்பை மீறி தோனியை சந்திக்க  முயன்ற இளைஞருக்கு போலீஸார் எச்சரிக்கை

சென்னையில் நடைபெற்ற  ஐபிஎல் காட்சிப் போட்டியின்போது, போலீஸ் பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் புகுந்து,தோனியை கட்டியணைக்க முயன்ற இளைஞர்  போலீஸாரால்  எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார்.
பாதுகாப்பை மீறி தோனியை சந்திக்க  முயன்ற இளைஞருக்கு போலீஸார் எச்சரிக்கை

சென்னையில் நடைபெற்ற  ஐபிஎல் காட்சிப் போட்டியின்போது, போலீஸ் பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் புகுந்து,தோனியை கட்டியணைக்க முயன்ற இளைஞர்  போலீஸாரால்  எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை,சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல்  கிரிக்கெட் காட்சிப்  போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், இரு குழுக்களாக பிரிந்து விளையாடினர். இப் போட்டியைக்காண ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.  இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இந்நிலையில்,போட்டி நிறைவடையும் தருவாயில், போலீஸ் பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் சென்ற ஒரு இளைஞர்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர்  தோனியை கட்டியணைக்க முயன்றாராம். இதைப் பார்த்த தோனி, அவரிடமிருந்து  விலகி ஓடினார். பின்னர் தோனி, அந்த இளைஞரிடம் கைகுலுக்கி, கட்டியணைத்தார். பலத்த பாதுகாப்பை மீறி அந்த இளைஞர் மைதானத்துக்குள் நுழைந்த சம்பவம்,  காவல்துறையினரை அதிர்ச்சியடையச் செய்தது. இதையடுத்து மைதானத்தை விட்டு வெளியே வந்த அந்த இளைஞரைப் பிடித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், மதுரை மாகாளிப்பட்டியைச் சேர்ந்த சு.அரவிந்த்குமார் (21) என்பதும், அங்குள்ள ஒரு கல்லூரியில் எம்பிஏ படித்து வருவதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், அரவிந்த்குமாரை எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் கிரிக்கெட் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com