ஜி.ரெங்கசாமி மூப்பனார் காலமானார்

ஜி.கே. மூப்பனாரின் இளைய சகோதரரும்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான ஜி. ரெங்கசாமி மூப்பனார் (86)
ஜி.ரெங்கசாமி மூப்பனார் காலமானார்


ஜி.கே. மூப்பனாரின் இளைய சகோதரரும்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான ஜி. ரெங்கசாமி மூப்பனார் (86) சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள சுந்தரபெருமாள்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜி. ரெங்கசாமி மூப்பனார் (86). இவர் மறைந்த ஜி.கே. மூப்பனாரின் இரண்டாவது இளைய சகோதரர்.
இவர் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், கட்சியில் சில பொறுப்புகளை வகித்து வந்ததுடன், ஜி.கே. மூப்பனாருக்கு முக்கியமான ஆலோசனைகளையும் வழங்கினார். ஜி.கே. மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு ஜி.கே. வாசனுக்கும் பல்வேறு தருணங்களில் ரெங்கசாமி மூப்பனார் முக்கிய ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
ஜி.கே. மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு திருவையாறு ஸ்ரீதியாகபிரும்ம சபாவின் தலைவராகப் பொறுப்பேற்று, ஆண்டுதோறும் தியாகராஜ ஆராதனை விழாவை நடத்தி வந்தார். மேலும், கும்பகோணம் நாட்டியாஞ்சலி விழா குழுத் தலைவராகவும் இருந்தார்.
சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், சென்னையில் உள்ள ஜி.கே. வாசன் வீட்டில் தங்கி மருத்துவச் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு செவ்வாய்க்கிழமை காலை ரெங்கசாமி மூப்பனார் காலமானார்.
இவரது உடல் பாபநாசம் அருகேயுள்ள சுந்தரபெருமாள்கோவில் கிராமத்துக்குக் கொண்டு வரப்பட்டு, புதன்கிழமை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படவுள்ளது. புதன்கிழமை மாலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
ரெங்கசாமி மூப்பனாருக்கு மனைவி சரோஜா  மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com