போலியோ விழிப்புணர்வுக்குத் தயார்: உயர்நீதிமன்றத்தில் நடிகர் சங்கம் தகவல்

போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது. 
போலியோ விழிப்புணர்வுக்குத் தயார்: உயர்நீதிமன்றத்தில் நடிகர் சங்கம் தகவல்


போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை முறையாக தொடர்ந்து நடத்த உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது தொடர்பாக மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து நீதிபதிகள் என்.கிருபாகரன்,  எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், "திரைப்பட நடிகர்கள் மக்களிடம் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்கள். அவர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது, எளிதில் மக்களைச் சென்றடையும்" என்று குறிப்பிட்டனர். மேலும் இந்த வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்கச் செயலர், நடிகர்கள் அஜீத், விஜய், சூர்யா ஆகியோரை எதிர்மனுதாரர்களாகச் சேர்த்து உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை 3 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.    

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (வியாழன்) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலியோ தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பிரசாரங்களில் ஈடுபட தயார் என்று நடிகர் சங்கம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

நடிகர் சங்கத்தின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com