கூவத்தூர் சம்பவம் எதிரொலி: ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க உத்தரவு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூவத்தூர் சம்பவம் எதிரொலி: ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க உத்தரவு


ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பொம்மிக்கு செவிலியர் பிரசவம் பார்த்ததாகவும், அப்போது குழந்தையின் தலை தனியே துண்டானதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த விவகாரம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க, சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  அக்குழுவானது, சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. துணை சுகாதார நிலையங்களைப் பொருத்தவரை காலை முதல் மாலை வரை மட்டுமே மருத்துவர்கள் இருப்பார்கள். இருந்தாலும், பிரசவம் போன்ற அவசர சிகிச்சை தேவைப்படும் நேரங்களில் அவர்கள் காலம் பார்க்காது உடனடியாக சுகாதார நிலையங்களுக்கு வந்து சேவையாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர ஆண்டுக்கு ஒரு வாரகாலம் மாவட்ட மருத்துவமனைகளில் சுகாதார நிலைய மருத்துவர்களும், செவிலியர்களும் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம், சிக்கலான சூழல்களை கையாளுவதற்கான அனுபவம் அவர்களுக்கு கிடைக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com