ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார்: சத்யபிரதா சாஹூ

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 
ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார்: சத்யபிரதா சாஹூ

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 26-ஆம் தேதி கடைசி நாளாகும். 

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ,
அதிமுக, திமுக என இரு தரப்பில் இருந்தும் புகார்கள் வருகின்றன, முக்கிய புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் 5 ஆண்டு வருமான வரி குறித்த தகவல்களை தெரியப்படுத்த வேண்டும். வேட்பாளர்கள் தவறான தகவலை அளித்திருந்தால், நீதிமன்றம் மற்றும் வருமான வரித்துறை விசாரணையை சந்திக்க நேரிடும். 

தமிழகத்தில் இதுவரை 209.53 கிலோ தங்கம், 310 கிலோ வெள்ளி, ரூ.29.84 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த தங்கத்தில் 94 கிலோவும், பணத்தில் 4.45 கோடியும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார். இவ்வாறு அவர் தெரிவித்தார். வழக்கு நிலுவையில் இருப்பதால், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 3 தொகுதிகளில் தேர்தல் நடத்த இயலாது என தேர்தல் ஆணையம் முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com