கள்ளக்குறிச்சியில் சுதீஷ் வேட்புமனு தாக்கல்

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ், விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல்
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தேர்தல் அலுவலர் அ.அனுசுயாதேவியிடம் மனு தாக்கல் செய்யும் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தேர்தல் அலுவலர் அ.அனுசுயாதேவியிடம் மனு தாக்கல் செய்யும் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ்.


கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ், விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் ஆகியோர்வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்துக்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ க.அழகுவேல் பாபு, தேமுதிக தெற்கு மாவட்டச் செயலர் எல்.வெங்கடேஷ், பாமக மாவட்ட துணைப் பொதுச் செயலர் ரமேஷ் ஆகியோருடன் சென்ற வேட்பாளர் எல்.கே. சுதீஷ் ,  தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அ.அனுசுயாதேவியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
மனு தாக்கல் செய்த பிறகு  சுதீஷ் கூறியதாவது:
சேலம் மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதி கருமந்துறையில் தமிழக முதல்வர் எனக்காக பிரசாரம் மேற்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். 
வேட்பாளர் எல்.கே.சுதீஷ்  சொத்து விவரம்:
சுதீஷ் பெயரில் ரூ.6.81 கோடி, மனைவி பூர்ணஜோதி பெயரில் ரூ.9 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளன. அசையா சொத்துகளாக சுதீஷ், அவரது மனைவி பெயரில் மொத்தம் ரூ.3.77 கோடி  என  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரம் பாமக வேட்பாளர் மனு தாக்கல்: விழுப்புரத்தில் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் எஸ்.வடிவேல்ராவணன் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பாளருடன் அதிமுக எம்.பி. இரா.லட்சுமணன், பாமக மாநில துணைப் பொதுச் செயலர்கள் தங்க.ஜோதி, ஏழுமலை, சிவக்குமார், தேமுதிக மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன், தமாகா மாவட்டத் தலைவர் தசரதன், பாஜக கோட்டப் பொறுப்பாளர் அருள், மாவட்டத் தலைவர் விநாயகம் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியரும், விழுப்புரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இல.சுப்பிரமணியனிடம், வேட்பாளர் வடிவேல் ராவணன் மனு தாக்கல் செய்தார்.
சொத்து மதிப்பு: கையிருப்பாக ரூ.4.5 லட்சமும், அவரது மனைவியிடம் ரூ.3 லட்சமும் மற்றும் 45 பவுன் தங்க நகைகள் வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com