புதுச்சேரி: வைத்திலிங்கம் வேட்புமனு தாக்கல்

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட   காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
புதுவை மக்களவைத் தேர்தல் நடத்தும் அதிகாரி அருணிடம் வேட்பு மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம். 
புதுவை மக்களவைத் தேர்தல் நடத்தும் அதிகாரி அருணிடம் வேட்பு மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம். 


புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட   காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட புதுவை சட்டப்பேரவை முன்னாள் தலைவர் வெ.வைத்திலிங்கம், புதுவை பிரதேச காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து முதல்வர் வே.நாராயணசாமி, பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம்,  கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணி அளவில் வந்த வைத்திலிங்கம், தேர்தல் நடத்தும் அதிகாரி அருணிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் இரா.விசுவநாதன், மார்க்சிஸ்ட் பிரதேச குழு உறுப்பினர் டி.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
சொத்து மதிப்பு: வைத்திலிங்கம் தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரது சொத்து மதிப்பு ரூ.10 கோடியே 80 லட்சத்து 17 ஆயிரத்து 546 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.   வைத்திலிங்கத்தின் பெயரில் ரூ.7 கோடியே 76 லட்சத்து ஐந்தாயிரத்து 161-ம், அவரது மனைவி சசிகலா பெயரில் ரூ.3 கோடியே 72 லட்சத்து 52 ஆயிரத்து 385-ம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்திலிங்கம் பெயரில் அசையும் சொத்து ரூ.2 கோடியே 94 லட்சத்து 99 ஆயிரத்து 161-ம், அசையா சொத்து ரூ.4 கோடியே 12 லட்சத்து 66 ஆயிரமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி சசிகலா பெயரில் அசையும் சொத்தாக ரூ.2 கோடியே 55 லட்சத்து 46 ஆயிரத்து 385-ம்,  அசையா சொத்தாக ரூ.ஒரு கோடியே 17 லட்சத்து 4 ஆயிரமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com