தோல்விகளைக் கண்டு துவள வேண்டாம்: ராமதாஸ் 

தோல்விகளைக் கண்டு துவள வேண்டாம் என கட்சித் தொண்டர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
தோல்விகளைக் கண்டு துவள வேண்டாம்: ராமதாஸ் 

தோல்விகளைக் கண்டு துவள வேண்டாம் என கட்சித் தொண்டர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தொண்டர்களுக்கு கடித வடிவில் அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்திருப்பது, கட்சிக்குப் பின்னடைவுதான்.
ஆனால், இந்த தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால், மத்தியில் மீண்டும் அமையவுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசின் துணையுடன், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்போம். அது தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் பெரும் பங்காற்றியிருக்கும். ஆனால், தேசிய அளவில் படுதோல்வி அடைந்து, தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணியால் தமிழக மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளைச் செய்ய முடியும் எனத் தெரியவில்லை. அந்த வகையில் பார்த்தால், தமிழகத்தில் அதிமுக - பாமக கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வியாகவே அமைந்துள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்தாலும், கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் பெற்ற அளவுக்கு இப்போதும் வாக்குகளை வென்றுள்ளோம். இந்தத் தேர்தலின் முடிவுகள் குறித்து ஆத்ம பரிசோதனை செய்துகொள்வதோடு, நம்மை நாமே வலுப்படுத்துவதற்கான முயற்சியிலும் ஈடுபடவேண்டும். 
 தோல்விகளைக் கண்டு துவள வேண்டாம். தொண்டர்கள் வீறு கொண்டு எழுந்தால் இனி வரும் தேர்தல்களில் வெற்றி நமதே. கடந்த காலங்களைப் போலவே மக்களின் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com