தினமணி கதிர்

துணிவே துணை!

ஆர். ஜெயலட்சுமி

கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளில் தான் கடைக்குச் சென்று ஒரு புதிய புடவை கூட அவர் வாங்கவில்லை. சராசரி சம்பளம் வாங்கும் பெண்களே வாரத்துக்கு ஒரு புடவை என வாங்கி குவித்து வரும் நிலையில் கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிக்கும் அவருடைய செயல் ஆச்சரியமான விஷயம்தான்.

'நான் புனித நீராடுவதற்காக காசியில் இருந்தேன். காசிக்குச் செல்லும்போது மிகவும் ரசிக்கும் ஒன்றை விட்டுவிட வேண்டும். அதிலிருந்து ஷாப்பிங், குறிப்பாக புடவைகளை வாங்குவதைக் கைவிட்டு விட்டேன். நான் இப்போது அத்தியாவசியப் பொருள்களை மட்டுமே வாங்குகிறேன்' என்று சுதா மூர்த்தி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் .

எளிமையை பற்றி நாம் பேசும்போது உடனடியாக நமக்கு நினைவுக்கு வருபவர்தான் இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்திதான். மாநிலங்களவை உறுப்பினராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இவர்.

1950-ஆம் ஆண்டு ஆக. 19-இல் பிறந்தவர் சுதா மூர்த்தி. கல்வியாளர், எழுத்தாளர், பரோபகாரர், லட்சக்கணக்கானோருக்கு உத்வேகம் அளிப்பவர் என்று பன்முகத் தன்மையைக் கொண்டவர். கல்வியே பெண்களை சுயமரியாதையுடன் உலகில் வாழ வைக்கும் என திடமாக நம்பியவர்.

புகழ்பெற்ற மருத்துவரின் மகளான இவர், கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட ஹூப்ளியில் உள்ள பி.வி பூமரெட்டி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் துறையில் மாநிலத்திலேயே முதலாவதாக தேறி தங்கப் பதக்கத்தை வென்றார். மேற்படிப்புக்காக பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்லூரியில் சேர்ந்து கணினி துறையில் எம்.டெக் முடித்தார் . அதிலும் மாநிலத்திலேயே முதலிடம் வந்து தங்கப்பதக்கம் பெற்றார்.

படிப்பை முடிக்க இருந்த நிலையில் அன்றைய நாள் இதழில் டாட்டா குழுமத்தின் 'டெல்கோ- டாட்டா என்ஜினீயரிங் நிறுவனம்' அளித்த விளம்பரம் சுதாவின் கண்ணில் பட்டது .அந்நிறுவன காலி பணியிடங்களை குறிப்பிட்டு இதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் கடைசி வரியில் பெண்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இளம் வயதிலேயே சுயமரியாதை சிந்தனையுடன் வளர்க்கப்பட்ட சுதாவால் ஏற்க முடியவில்லை. அந்த நிறுவனப் பணிக்கான அனைத்து தகுதி திறமை தனக்கு இருந்த போதிலும் பெண் என்பதற்காக பணி மறுக்கப்படுகிறது என்று வேதனைப்பட்டார் .

'பெரிய நிறுவனங்களே இப்படி பாலின பாகுபாடு காட்டலாமா?' என்று அவர் அஞ்சல் அட்டையில் எழுதி டாடா குழுமத் தலைவரான ஜே. ஆர். டி. டாட்டாவுக்கு அனுப்பி வைத்தார். கடிதத்தை படித்ததும் டாட்டா உடனடியாக தன் நிறுவன அதிகாரிகளை அழைத்து, 'இந்தப் பணிக்கான தகுதி இந்தப் பெண்ணுக்கு இருந்தால் அவரை உடனடியாக பணியில் அமர்த்துங்கள். இனி டாட்டா குழும நிறுவனங்கள் எவற்றிலும் பணிகளுக்கான நடைமுறையில் ஆண், பெண் என எந்தப் பாகுபாடும் காட்டப்படக் கூடாது' என ஆணையே பிறப்பித்தார் .

தன் துணிச்சலான செயல்பாடுகள் ஒரு பெரும் நிறுவனத்தின் விதியையே மாற்றி எழுதிய சுதா, பிற்காலத்தில் தான் உழைத்து சாம்பாதித்து சேர்த்த பணத்தில் பத்து ஆயிரம் ரூபாயை தன் கணவரின் கனவுத் திட்டமான ஒரு நிறுவனத்தின் முதலீடு செய்தார் . இந்த முதலீட்டைக் கொண்டு உருபெற்று இன்று பல லட்சக்கணக்கான கோடிகள் மதிப்பில் பெரும் நிறுவனமாக மலர்ந்து நிற்கிறது இன்போசிஸ்.

'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னர் மட்டுமல்ல; சமுதாயம், குடும்பம், நாட்டின் வெற்றிக்கு பின் நிச்சயமாக ஒரு பெண் இருப்பாள்' என்று நிரூபித்த பொறியாளர்தான் சுதா நாராயணமூர்த்தி. இன்போசிஸ் நிறுவனத்தை துவங்கிய என்.ஆர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா நாராயண மூர்த்தி தந்த பத்தாயிரம் முதல் முதலீடாக கொண்டு உருவான நிறுவனம்தான் இன்போசிஸ்.

சுதா மூர்த்திக்கு 2006- ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது, 2023-இல் பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். சுதா மூர்த்தியின் கன்னட நாவலை அடிப்படையாகக் கொண்டதுதான் 'பித்ருரூன்' என்ற மராத்தி திரைப்படம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டை விலை நிலவரம்

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

SCROLL FOR NEXT