ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உதடுகளில் வறட்சி!

நான் தனியார் நிறுவனத்தில் பஉகஉடஏஞசஉ ஞடஉதஅபஞத ஆகப் பணிபுரிகிறேன். வயது 22. அவ்வப்போது எனது உதடுகள் வறண்டும், வெடித்தும், கறுப்பாகவும் காணப்படுகிறது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உதடுகளில் வறட்சி!

நான் தனியார் நிறுவனத்தில் பஉகஉடஏஞசஉ ஞடஉதஅபஞத ஆகப் பணிபுரிகிறேன். வயது 22. அவ்வப்போது எனது உதடுகள் வறண்டும், வெடித்தும், கறுப்பாகவும் காணப்படுகிறது. இது எதனால்? குணப்படுத்த என்ன செய்வது?

- மா.தமிழ்செல்வி, பொள்ளாச்சி.

தொழில் சார்ந்த உபாதையாக இது இருக்கலாம். நிறைய பேச வேண்டிய நிலையில் இருந்தால், குரல்வளையும், அதனைச் சுற்றியுள்ள நரம்புகளும் தொய்வடைவதால் ஏற்படும் வாயுவின் சீற்றம், வாய் மற்றும் உதடுகளில் வறட்சியையும், வெடிப்பையும் ஏற்படுத்தலாம். உடல் போஷாக்குக் குறைவினாலும் நீங்கள் குறிப்பிடுவது போல ஏற்படலாம். நெய்ப்பும், கனமும், வழுவழுப்பும் நிறைந்த பாலும், பால் சார்ந்த உணவுப் பொருட்களும், மாமிச சூப்பு வகைகளும், நிறைவான ஓய்வும் உடலுக்குக் கிடைக்காமற் போனால், நரம்பு மண்டலங்களில் ஏற்படும் பலவீனமானது, உடலைத் தாக்கி, உடல் மெலிவும், உதடுகள் கறுப்பதும் வறட்சியாவதும், வெடிப்பதும் நிகழும். "ஓஜஸ்' எனும் உடல் தாதுக்களின் சாரமான பகுதி, சரி வர உணவில் செரிமான விசேஷத்தினால் ஏற்படாமற் போனால், முகம் மற்றும் உடல் வாட்டம் ஏற்படுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. மனதில் ஏற்படும் அச்சம், கோபம், வெறுப்பு ஆகியவற்றின் வாயிலாக சீற்றமுறும் "ஓஜஸ்' எனும் மனோதோஷத்தின் காரணமாகவும்,உதடுகள் கறுத்தும்,வெடித்தும் போகக் கூடும்.

குடும்பத்திலுள்ள முன்னோர்களுக்கு உதடுகள் சார்ந்த உபாதைகளிருந்தால், உங்களுக்கும் அது எளிதில் தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரசாயன கலவைகள் கொண்ட உதட்டுச் சாயத்தைப் பூசிக்கொண்டு, பணிபுரிய வேண்டிய நிர்பந்தம் உடையவராக, நீங்கள் இருந்தால், அதன் மூலமாகவும் இப்பிரச்னையை சந்திக்க வேண்டி வரும். இயற்கைக்கு மாற்றாக, ஏதேனும் புதிய விஷயங்களை உடலுக்குக் காண்பிக்க நேர்ந்தால், அதற்கான விளைவு, உடல் உபாதையாகத் திரும்பி விடுகிறது. உண்ணும் உணவுகள் அனைத்தும் சரிவர செரிக்காமல்,  மலமாக வெளியேறும் நிலையில், ரத்தத்தில் ஏற்படும் ஊட்டக் குறைவானது, ரத்தச் சோகையாக மாறி உதடுகளில் பிரதிபலிக்கக் கூடும். அதனால் இந்த உபாதையானது உங்களுக்கு எங்கிருந்து ஆரம்பிக்கிறது 

என்பதைக் கண்டறிய வேண்டிய அவசியம் இருக்கிறது.

அறுசுவை உணவுகளில், அதிகம் இனிப்பான உணவுப் பொருட்களையே நீங்கள் சாப்பிட வேண்டும். இனிப்பு என்றவுடன் பாயசம், அதிரசம், லட்டு என்று மட்டுமல்ல, உணவின் செரிமான இறுதியிலும் இனிப்பாகவே நிற்கக் கூடிய, பால், நெய், வெண்ணெய், வெல்லம், வெல்லம் கலந்த பணியாரம், கொழுக்கட்டை, அவல், உளுந்து, தேங்காய்ப் பால், எள்ளு போன்றவையும் அடங்கும். இவற்றைச் செரிமானம் செய்து, சத்துப்பகுதிகளை உடல் உட்புற ரத்தத்தின் வழியாக எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு குடலுக்கு இருப்பதால், அங்கிருந்து செயல்படும் ஜாடராக்னி எனும் நெருப்பும், சமானன் என்ற வாயும் சீராக வேலை செய்ய வேண்டும். குடலின் அப்பழுக்கற்ற நிலை இதற்கு ஆதாரமாக இருப்பதால், குடல் கெட்டுவிடும் நிலையை உருவாக்கும் அழுக்குக் கலந்த திண்பண்டங்கள், குளிர்பானம், திறந்த வெளியில் தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். கறிவேப்பிலை, சுக்கு, இஞ்சி, சீரகம், தனியா, புளி, கடுகு, பட்டை, சோம்பு, மஞ்சள், உப்பு, வெந்தயம், ஓமம், கிராம்பு, ஏலக்காய், பெருங்காயம் போன்றவை நம் உணவில் சேர்ப்பதின் மர்மமே, அவை குடலைச் சுத்தப்படுத்தி, தேவையற்ற அழுக்குகளைச் சுரண்டி வெளியே அகற்றி, பசித்தீயை ஜ்வாலை கெட்டுவிடாமல் பாதுகாப்பதற்காகத் தான். அதனால் இவற்றை சமச்சீராக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெளிப்பூச்சு அல்லது களிம்புகள் மூலமாக, உங்கள் பிரச்னை தீராது. தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கலாம். உங்கள் பகுதி மலைசார்ந்த, மழை அதிகம் பெய்யும் இடமாக இருப்பதால், காற்றிலுள்ள பனிப்பொழிவு உதடுகளை வறட்சியாக்கலாம். அதனால், இரவில் படுக்கும் முன் தூய தேங்காய் எண்ணெய்யை உதடுகளில் தடவிய பிறகு, படுத்துறங்கலாம்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com