தினமணி கதிர்

பி ட் ஸ்

வி.ந.ஸ்ரீதரன்

நாடாளுமன்ற முன்னாள்  சபாநாயகர்  சோம்நாத்  சாட்டர்ஜி  மூத்த உறுப்பினர் என்பதால்  தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவிக்கும்  "புரோ டெர்ம்'  சபாநாயகராகப்  பணிபுரிந்தார்.  பிறகு  அவரே சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருபுரோ டெர்ம் சபாநாயகர் முறைப்படி சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தியப் பார்லிமெண்ட் ஜனநாயகத்தில்  அதுவே  முதன்முறை.

நாடாளுமன்றத்திற்கு மிக அதிகமான  முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திரஜித் குப்தா. பதினோருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பத்துமுறை தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் மூன்று பேர். வாஜ்பாயி,  சோம்நாத்  சட்டர்ஜி மற்றும் சயித்.

ரவிந்திரநாத்   தாகூர்,  தான்   எழுதிய  இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு  அவரே இசையமைத்திருக்கிறார்.

இந்தியாவில் ஆகஸ்ட்  15-ஆம் தேதியை சுதந்திர தினமாகக் கொண்டாடும்போது பீஹார் மாநிலம் "துமான்' என்னும்  கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய  இரண்டு  நாட்களை சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறார்கள். 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  "வெள்ளையனே வெளியேறு'  என்னும் இயக்கம் தீவிரமாக நடந்தபோது  இந்த கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் போலீஸ் ஸ்டேஷனில்  கொடியேற்றியபோது சுட்டுக் கொல்லப்பட்ட  நாள் ஆகஸ்ட் 16.  எனவே அந்த நாளையும்  சுதந்திரதினமாக கொண்டாடுகிறார்கள். 2015-ஆம் ஆண்டில் பீஹார் அரசு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT