பேல்பூரி

பிறந்துவிட்டோம் என்று வாழாதீர்கள்.இனி பிறக்கப் போவதில்லை என்று நினைத்து  வாழுங்கள்.
பேல்பூரி

கண்டது

(வத்திராயிருப்பில் ஒரு தெருவின் பெயர்)

தலகாணித்தெரு

பொன்.பிரபாகரன், வத்திராயிருப்பு.

(சென்னை ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையின் சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகம்)

பிறந்துவிட்டோம் என்று வாழாதீர்கள்.
இனி பிறக்கப் போவதில்லை என்று நினைத்து  வாழுங்கள்.

அ.செல்வகுமார், சென்னை-19

(புலிவலத்தில்  உள்ள ஒரு லாண்டரி கடையின் பெயர்)

நியூ ஆபிஸர்ஸ் லாண்டரி

ஏ.கலாமதி, புலிவலம்.

(திருநெல்வேலியில் பூட்டிய கடை  ஒன்றில் கண்ட வாசகம்)

இங்கு இயங்கி வந்த டீ கடை சென்னை- அயனாவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

க.சரவணகுமார், திருநெல்வேலி-11.


கேட்டது

(திருவாரூர் ஆவணி வீதியில் ஒரு வீட்டுவாசலில் இருவர்)

""ஏம்பா ஆபிஸில இருந்து   வீட்டுக்கு வந்து ஒரு மணிநேரம் ஆவுது. இன்னும் டிரஸ் சேஞ்ச்  பண்ணாம இருக்கே''
""சாப்பாடு ரெடியாவுற வரைக்கும் மாத்த முடியாது. ஏன்னா என் வொய்ஃப் மறந்துட்டதாச்  சொல்லி கடையிலே ஏதாவது சாமான் வாங்கி வரச் சொல்லுவா.  அதுக்குத்தான் தயார் நிலையில்  இருக்கேன்''

- பரதன், விளமல்.


(நாகர்கோவிலில் அண்ணா பேருந்து நிலையத்தில்  கல்லூரி மாணவர்கள் இருவர்)

""நேற்று உனக்கு கால் பண்ணினா "நீங்க தொடர்பு கொள்ள விரும்பும் பிச்சைக்காரன் தொடர்பு எல்லைக்கு வெளியே பிச்சை எடுக்கிறான்''  என்று பதில் வந்ததுடா''
""அப்படியா.... நான் உனக்கு கால் பண்ணினப்போ நீங்க அழைக்கும் பரதேசி வேறு ஒரு பரதேசியிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என்று பதில்  வந்துச்சே''

- சு.நாகராஜன், பறக்கை.


மைக்ரோ கதை

பக்கத்துவீட்டுப் பையன் குமார் பொதுத் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தான்.  ""குமார் உனக்கு பரீட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?''  என்று கேட்டேன். 

""தெரியாது. சொல்லுங்க அங்கிள்...''  என்றான் குமார்.

""பரீட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க. முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்வியை எழுதணும். அடுத்த 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்வியை எழுதணும். அப்புறம் அரை மணி நேரத்துல  2 மார்க் கேள்வியை எழுதணும்.  கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்வியை எழுதணும். தெரியுமா?'' என்றேன்.

குமார் சற்று நேரம் யோசித்துவிட்டு என்னிடம் கேட்டான்:

""எல்லாம் சரி அங்கிள். 3 மணி நேரமும் கேள்வியை எழுதிக்கிட்டே இருந்தால்... அப்புறம் எப்ப பதில் எழுதுறது?''

வளர்மதி முத்து, திருச்சிற்றம்பலம். 


யோசிக்கிறாங்கப்பா!


பகல்ல தூக்கம் வந்தால் 
உடம்பு பலவீனமா இருக்குன்னு அர்த்தம்!
இரவிலே தூக்கம் வரலைன்னா
மனசு பலவீனமா இருக்குன்னு அர்த்தம்.

கமலா முத்து, சென்னை-60


அப்படீங்களா!

மோட்டார் பைக்கை நாம் எல்லாம் சாலையில் பறந்து செல்லத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதை விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். கிணற்றோரம் அல்லது தண்ணீர் உள்ள பகுதியின் ஓரமாக பைக்கை நிறுத்தி வைத்துவிட்டு, அதன் இன்ஜினுடன் நீர் இறைக்கும் மோட்டாரை இணைக்கிறார்கள். மோட்டார் பைக்கை ஸ்டார்ட்  செய்து, இன்ஜினை  ஓட விட்டதும் குழாயிலிருந்து தண்ணீர் கொட்டத் தொடங்குகிறது. 

இதனால் என்ன பயன்? தனியாக நீர் இறைக்கும் மோட்டார் ரூம் கட்டத் தேவையில்லை. பைக்கை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று தண்ணீர் இறைக்க பயன்படுத்தலாம்.  ஒரு மணி நேரத்துக்கு 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் முதல் 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வரை  இறைக்க முடிகிறது.  40 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்தும் நீர் இறைக்கலாம்.  அதை 50 அடி உயரத்துக்கும் கொண்டு சென்று உயரமான இடங்களில் உள்ள செடிகளுக்கும் நீர் பாய்ச்சலாம்.  தொடர்ச்சியாக 100 மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச முடியும்.  ஒரு மணி நேரம் இந்த மோட்டார் பைக் நீர் இறைக்கும் முறையைப் பயன்படுத்தினால் 200 மி.லி. பெட்ரோல்தான் செலவாகிறது.  எதையும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு  இது ஓர் உதாரணம்.

- என்.ஜே., சென்னை-116
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com