தினமணி கதிர்

பேல்பூரி

DIN

கண்டது


(சென்னை செங்குன்றம்  கடைவீதியில்  ஒரு பெட்டிக்கடையின் முன்பாக தொங்கவிடப்பட்டிருந்த  பலகையில்)

சைக்கிளை நீங்கள் ஓட்டினால்...
உங்கள் உடம்பில் உள்ள சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தத்தை அது ஓட்டும்.

எஸ்.வடிவு, சென்னை-53

(காரைக்குடியில் ஸ்டேட் பாங்க் அருகேயுள்ள
ஒரு தேநீர்க் கடையின் பெயர்)

வட போச்சே

ஜி.ராஜா, விருதுநகர்.

(சென்னை அனகாபுத்தூரில் உள்ள ஹியரிங் எய்டு விற்கும் கடையின் பெயர்)

SHABTAM

எம்.உடையம்மாள் முருகன், 
ரெட்டியபட்டி -கோம்பைப்பட்டி.


கேட்டது

(கோபிசெட்டிபாளையத்தில் ஒரு வீட்டில்)

""டேய்... தட்டுல போட்ட சாப்பாடு ஆறிட்டிருக்கு. இன்னும் சாப்பிடாம என்ன தேடிக்கிட்டிருக்கே?''

""டி.வி. ரிமோட்டைக் காணோம்மா... அது இல்லாம எப்படிச் சாப்பிடுறது?''

க.சங்கர், நாகர்பாளையம்.

(திருச்சி பொன்மலையில் ஒரு தையல்கடையில்)

வந்தவர்: என் பேண்ட்டுக்கு ஜிப் போட முடியுமா?
டெய்லர்: அதை நீங்கதாங்க போட்டுக்கணும். நான் போட்டுவிட்டா நல்லா இருக்காது.

சம்பத்குமாரி,  திருச்சி-4

எஸ்.எம்.எஸ்.


தோசை சுடும் கல் உள்ளே இருந்தால்...
உயர்தர ஓட்டல்.
வெளியே இருந்தால்...
சாதாரண ஓட்டல்.

வளர்மதி முத்து, திருச்சிற்றம்பலம். 


மைக்ரோ கதை

வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.  ஒருவன் தண்ணீர் குடிக்கலாம் என்று மண்பானை அருகே சென்றான்.  கடுமையான வெப்பநிலையிலும் மண்பானையின் உள்ளேயும், வெளியேயும் "ஜில்' என்று இருந்தது.  அது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  

""இப்படி வெயில் கொளுத்தும்போதும் எப்படி நீ ஜில்ன்னு இருக்கே?'' என்று மண்பானையிடம் கேட்டான்.

அதற்கு மண்பானை சொன்னது: ""எனது தொடக்கமும் முடிவும் மண் என்று எனக்குத் தெரிந்துவிட்டது.  யார் ஒருவர் தனது தொடக்கத்தையும் முடிவையும் தெரிந்து கொள்கிறாரோ,  அவர் எப்போதும் குளிர்ச்சியாகவே இருப்பார். நானும் அப்படித்தான்.'' 

ஜோ.ஜெயக்குமார்,  நாட்டரசன்கோட்டை.

யோசிக்கிறாங்கப்பா!

நாம் எதைப் பற்றிக் கொள்ள 
கடுமையாக உழைக்கிறோமோ...
கடைசியில் அதுவே
நம்மைப் பற்றிக் கொள்ளும்.

வரதராஜன், திருவாரூர்.


அப்படீங்களா!

ஸ்ட்ராடோலாஞ்ச் என அழைக்கப்படும் இந்த விமானம் உலகிலேயே மிகப் பெரியது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவுநர் பால் ஆலன் அதை உருவாக்கியுள்ளார்.  கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் இந்த விமானத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 

இந்த விமானத்தின் நீளம் 238 அடி.  உயரம் 50 அடி.  இதன் இறக்கைகள் 385 அடி நீளமும் 50  உயரமும் உள்ளவை.  இந்த விமானத்தின்  எடை 226 டன்.  இதில் 2 விமானிகள் அறை, இரு உடற்பகுதிகள் இருக்கின்றன. 6 என்ஜின்கள் 
உள்ளன. 

6 லட்சம் கிலோ எடையைச் சுமந்து செல்லக் கூடியவை.  இவ்வளவு பெரிய விமானம்,  மக்கள் பயணம் செய்வதற்காக  தயாரிக்கப்படவில்லை. 

விண்வெளிக்கு செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 

- என்.ஜே., சென்னை-116.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT