யார் அந்த நிலவு?

"சாந்தி'  தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற  "யார் அந்த நிலவு?'  என்ற பாடல் உருவான பின்னணியை  மெல்லிசை மன்னர்  எம்.எஸ். விஸ்வநாதன் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்:
யார் அந்த நிலவு?

"சாந்தி'  தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற  "யார் அந்த நிலவு?'  என்ற பாடல் உருவான பின்னணியை  மெல்லிசை மன்னர்  எம்.எஸ். விஸ்வநாதன் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்:

""சாந்தி   படத்தின் பாடல்களுக்கு  டியூன் அமைத்துக் கொண்டிருந்தபோது என்னிடம்  சிவாஜி, "பிரபல  ஆங்கில பாப் பாடகர்  கிளிப் ரிச்சர்டு  பாடுவது மாதிரி உன்னால் டியூன் போட முடியுமா?'   என்று கிண்டலாக  சவால் விட்டார்.  
நானும், "என்னால்  டியூன் போட முடியும்.  அதற்கு ஏற்ப நீங்க நடிக்கணுமே' என்று கூறினேன். 

இதை ஒரு சவாலாக எடுத்து டி.எம்.எஸ்ûஸ  முதன் முதலாக  பேஸ்  வாய்ஸில் பாட வைத்து  ரிகார்ட்  செய்தேன்.

படப்பிடிப்பு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு  முன் இந்தப் பாட்டை சிவாஜிக்கு போட்டுக் காண்பித்தார் இயக்குநர்.  மவுனமாக பாடலைக் கேட்ட சிவாஜி பாடலுக்காக  ஷூட்டிங்கை தள்ளிப் போட்டுக் கொண்டே  சென்றார்.

கவலை அடைந்த இயக்குநர் பீம்சிங், "பாட்டு பிடிக்கலையா?  வேற டியூன் போடச் சொல்லவா?'   என்று கேட்டார்.

அதற்கு   சிவாஜி சிரித்துக் கொண்டே, "விசுவை நான் சீண்டிவிட்டதில் கண்ணதாசனின் அற்புதமான வார்த்தைகளுக்கு டி.எம்.எஸ். பிரமாதமா பாடியிருக்கிறார். இந்த மூன்றையும் தூக்கி அடிக்கிற மாதிரி நான் நடிக்கணும். அதுக்கு  யோசிக்க எனக்கு டயம் வேண்டும்'  என்று கூறினார்.  அதன்படியே சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே  அந்த காட்சியை  ஊதித் தள்ளி விட்டார்.

"பிரபலங்களின்  வாழ்வில்  சுவையான  நிகழ்வுகள்' என்ற நூலிலிருந்து. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com