சிரி... சிரி... 

"கல்யாணத்துக்குப் பிறகு எல்லாமே உனக்கு ஜெயம்தான்னு அந்த சோதிடர் சொன்னாரே?''
சிரி... சிரி... 

• "கல்யாணத்துக்குப் பிறகு எல்லாமே உனக்கு ஜெயம்தான்னு அந்த சோதிடர் சொன்னாரே?''
"எனக்கு நிச்சயம் செய்திருக்கிற பொண்ணு பேரு ஜெயம்னு அவருக்குத் தெரிஞ்சிருக்குமோ?''
வி.ரேவதி, தஞ்சை.

• "பொண்ணை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு. கல்யாணத்துல பொண்ணுக்கு என்ன போடுவீங்க?''
"இதே மாதிரி மேக்கப்தான்''
சங்கீத சரவணன், மயிலாடுதுறை

• "தலைவர் ரொம்ப வெகுளியா இருக்கார்ன்னு எப்படிச் சொல்றே?''
"8 வழி சாலைன்னா டிரைவிங் ஸ்கூல்ல போடுற 8 மாதிரி இருக்கும்மான்னு கேட்கிறார்''
அ.செல்வகுமார், சென்னை-19

• "உங்க உடம்புல இருக்குற சுகர்-ஐ கவனமா பராமரிக்கிறீங்களா?''
"பின்னே... அது எங்க பாட்டன் சொத்தாச்சே... தாத்தா, அப்பா எனக்குன்னு வாரிசுப்படி வந்திருக்கு''
கு.அருணாசலம், தென்காசி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com