வாழ்க்கை கொடுத்த பாடம்!

50 வயது கிரிஸ் லெவிஸ் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர். மேற்கு இந்திய தீவுகளின், ஜார்ஜ் டவுனில் பிறந்தாலும் 10 வயதில் இங்கிலாந்தில் குடியேறியவர். பின்னாளில் இங்கிலாந்து
வாழ்க்கை கொடுத்த பாடம்!

50 வயது கிரிஸ் லெவிஸ் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர். மேற்கு இந்திய தீவுகளின், ஜார்ஜ் டவுனில் பிறந்தாலும் 10 வயதில் இங்கிலாந்தில் குடியேறியவர். பின்னாளில் இங்கிலாந்து அணிக்காக, 32 டெஸ்ட் போட்டிகளிலும் 53 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர். 
இந்தியாவில் 1992- 93-இல் சுற்றுப் பயணம் செய்தபோது, சென்னையில் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்தவர். 1992-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையிலும் பங்கு கொண்டார். ஒரு கட்டத்தில் வாழ்க்கைத் தடம் புரண்டது.
2008-ஆம் ஆண்டு டிசம்பர் 1 -ஆம் தேதி காட்விக் விமான நிலையத்தில், உணர்ச்சியை இழக்கச் செய்யும் கோகைன் போதை மருந்தைக் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டு 13 ஆண்டுகள் தண்டனை பெற்றார். ஆனால் நன்னடத்தை அடிப்படையில் ஆறரை ஆண்டுகளுக்குப் பின் 2015- ஆம் ஆண்டு ஜூனில் விடுதலை செய்யப்பட்டார்.
ஜெயிலில் பட்ட அனுபவங்களை வைத்து ‘CRAZY  MY  ROAD TO REDEMPTION' என்ற பெயரில் நூல் எழுதி வெளியிட்டார். அமோகமாக விற்பனையானது.
அடுத்து கதை வசனகர்த்தா மற்றும் இயக்குநரான ஜிம்கிரகாம் ப்ரவுனுடன் இணைந்து "டக்லஸ் ப்ளேக்லாந்து' என்ற பெயரில் ‘THE LONG WALK BACK' என்ற நாடகத்தை எழுதி வருகிறார்.
- ராஜிராதா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com