சிரி... சிரி... சிரி... சிரி... 

"ஆமாம் ... மணப்பெண்ணுக்கு "குக்' பண்ணத் தெரியுமான்னு கேட்க மாட்டாங்க... ஸ்விகியில் 
சிரி... சிரி... சிரி... சிரி... 

• மானேஜர்: என்னம்மா! 
நைட்டி போட்டுக்கிட்டு ஆபீசுக்கு வர்றே?
செகரட்டரி : நீங்கதானே சார் 
ஆபிûஸ வீடு மாதிரி நினைச்சுக்க சொன்னீங்க.

• அவர்: எங்க தலைவருக்கு கட்சியும், 
கண்ணும் ஒண்ணுதான்
இவர்: நிஜமாவா?
அவர்: ஆமாம் அவருக்கு 
ரெண்டுலேயுமே பவர் இல்லை.

• டாக்டர் : இன்னிக்கு எனக்கு 
நாலு ஆபரேஷன் இருக்கு
நோயாளி : நான் ஒரு பேஷண்ட்தானே 
இருக்கேன் டாக்டர்.
டாக்டர்: உங்களுக்குத்தான் 
நாலு ஆபரேஷனும்

• அவர்: கச்சேரி சீசனும் அதுவுமா
அந்த பாகவதர் ரொம்ப பாவம்.
இவர்: ஏன்?
அவர்: டாக்டர் அவரை 
வாயை கட்ட சொன்னாராம்.
வி.பார்த்தசாரதி

• "மாப்பிள்ளை வீட்டுக்காரங்க 
ரொம்ப ரொம்ப மார்டன்''
"அப்படியா?''
"ஆமாம் ... மணப்பெண்ணுக்கு 
"குக்' பண்ணத் தெரியுமான்னு கேட்க மாட்டாங்க... ஸ்விகியில் 
"புக்' பண்ணத் தெரியுமான்னுதான் 
கேட்பாங்க.

• "தலைவர் மட்டும் ஏன் இப்படி உளர்றார்''
"தப்பாச் சொல்லாதீங்க''
"என்ன தப்பு?''
"உளர்றது தலைவரோட குல வழக்கமாம்''
சாய், சாலிகிராமம்.

• " அவருகிட்டே எந்த பொருள்
வாங்கினாலும் உல்டாவா 
தான் வேலை செய்யும்''.
"என்ன வாங்கினீங்க?''
"ஊதுபத்தி வாங்கினேன், கொளுத்துனா கொசு சாகுது''.
அ.செல்வகுமார், திருவொற்றியூர். 

• கடைக்காரர்: உங்க வீட்டுக்காரர் கண்டக்டரா?
பெண்: எப்படி கண்டுபிடிச்சீங்க?
கடைக்காரர்: ஜவுளிக்கடைக்கு வரும்போது கூட
ரூபாய் நோட்டை விரல் இடுக்கில் 
வைத்திருக்கிறாரரே!
கு.இரத்தினம், தேனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com