தினமணி கதிர்

அகராதி 63 கிலோ

DIN


ஆக்ஸ்போர்டு  இங்கிலீஷ்  டிக்ஷனரி  20 பாகங்களாக வந்துள்ளது.  இதன் மொத்த  எடை 62.6 கிலோ  இந்த  அகராதிகளில்  24 லட்சம்  பொன்மொழிகள்  உள்ளன.  இவற்றில்  30  ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பொன்மொழிகள்  ஷேக்ஸ்பியரின்  நாடகங்களிலிருந்து  எடுக்கப்பட்டு  இந்த அகராதியில்  சேர்க்கப்பட்டுள்ளன.

*தங்கத்தின்  தூய்மையைத்தான்  "காரட்'   என்கிறோம்.  மிகவும்  தூய்மையான தங்கம்  24 காரட். இதில்  நகைகள்  செய்ய இயலாது.  வளையும். அதனால், சிறிது  செம்பு சேர்த்து உருவாக்கினால்  நகைகள்  செய்யலாம்.  22 கேரட்  தங்கம்  என்றால்  அதில்  2 பங்கு  செம்பு  சேர்ந்துள்ளது என்று அர்த்தம்.  18 காரட்  தங்கம்  என்றால்  6 பங்கு  செம்பு  சேர்ந்துள்ளது  என்று அர்த்தம்.
பி.கோபி,  கிருஷ்ணகிரி

*எல்லோராலும் இசைக்குயில்  என்று புகழப்பட்ட  லதா மங்கேஸ்கர்  ஆரம்ப காலத்தில்  மராத்திப் படங்களில்  கோரஸ் பாடல்கள்  பாடி கொண்டிருந்தார்.

*"சிவந்த மண்'  படத்தில்  "பார்வை யுவராணி  கண்ணோவியம்...' என்ற பாடலை  டாக்டர்  பாலமுரளி  கிருஷ்ணாவை பாட வைத்து  எம்.எஸ்.விஸ்வநாதன்  பதிவு செய்து வைத்திருந்தார்.  "இந்தப் பாடலை  டி.எம்.  எஸ்ûஸப் பாட  வைத்து  பதிவு  செய்யுங்கள்'  என சிவாஜி  கணேசன்  சொல்லிவிட்டார்.  "ஏன்?'  என்று  விஸ்வநாதன்  கேட்டதற்கு,  "பாலமுரளி  பாடுகிறார்  என்று தானே  சொல்வாங்க  சிவாஜி  கணேசன்  பாடினார்  என்று சொல்ல  மாட்டார்களே''  என்றாராம் சிவாஜி.
ஆர்.கே. லிங்கேசன்,  மேலகிருஷ்ணன்புதூர்.


*சென்னையில்  மெரினா  கடற்கரையிலுள்ள  கலங்கரை விளக்கின் உயரம்  49 மீட்டர். இது  300  வாட்ஸ்  மின் திறனால்  இயங்குகிறது.  மேலே செல்லவும்  கீழே  இறங்கவும்  லிஃப்ட்  வசதியும்  செய்யப்பட்டுள்ள  முதல் கலங்கரை விளக்கம்  இதுவே. இதில்  நான்கு உருபெருக்கி கண்ணாடிகள்  அமைக்கப்பட்டுள்ளன.  இதிலிருந்து  புறப்பட்டு  செல்லும்  ஒளியின்  வீச்சு  40 மைல்  தொலைவிற்குத்  தெரியும்.

*சுவரொட்டி  மூலம் விளம்பரப்படுத்தும் முறை  இந்திய  திரை உலகில்  1923  -ஆம் ஆண்டு  ஏற்பட்டது.  பாபுராவ்  பெயிண்டர்  என்பவர்  தம்முடைய  "மாயா பஜார்'  என்னும்  படத்தின் மூலம்  இம்முறையைத்  தொடங்கி  வைத்தார்.

*பெங்களுருக்கு  அருகிலுள்ள  சிறிய  ஊரான  சிம்பதிராவுக்கு  "வீணை ஊர்'  என்ற செல்லப்  பெயருண்டு  அங்கே குடிசைத் தொழிலாய்  வீணைகள்  செய்யப்படுகின்றன.
எம்.எஸ்.மயில்,  திருநெல்வேலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT