தினமணி கதிர்

75 வயது இசைக் குழந்தைகள்!

தினமணி

"இசை ஞானி இளையராஜா எப்படி ஒரு பாட்டை உருவாக்குகிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?' கண்டிப்பாக ஜூன் 2 ஆம் தேதி "இசை கொண்டாடும் இசை' என்ற மாபெரும் இசை நிகழ்ச்சியைக் காண நேரில் வாருங்கள் தெரிந்து விடும்'' என்கிறார் இசையமைப்பாளர் தினா.
 இவர் தான் இன்று திரை இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர். "பிரச்னையான இரு கலைஞர்களை எப்படிச் சேர்க்க முடிந்தது?'' என்ற கேள்விக்கு கோபத்துடன் பதிலளிக்கிறார்.
 ""பிரச்னையான என்று அடைமொழி இங்கு யாருக்குமே பொருந்தாது. இருவருமே 75 வயது இசைக் குழந்தைகள் என்றுதான் கூற வேண்டும்'' என்று கூறிவிட்டு தொடர்ந்தார்.
 ""நான் மே மாதம் 27 -2018 ஆம் தேதி தலைவர் பதவி ஏற்றேன். வாழ்த்துப் பெற ராஜா சாரை சந்திக்க சென்றேன். அதற்கு முன்னரே அவர் திரை இசைக் கலைஞர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனநிலையில் தான் இருந்தார். வாழ்த்தைப் பெற்றுக் கொண்டு ராயல்டி விஷயத்தைப் பேசிவிட்டு, சங்கத்திற்காக ஒரு கச்சேரி செய்து கொடுக்க வேண்டும் என்று என் விண்ணப்பத்தை வைத்தேன். கண்டிப்பாகச் செய்கிறேன் என்று சொன்னவுடன், நான் விடாமல் "உங்கள் பிறந்த நாளில் இந்த கச்சேரியை வைத்துக் கொள்ளலாமா?" என்று முன்பே முடிவு செய்து வைத்திருந்த ஜூன் 2 -ஆம் தேதியை சொல்ல, அவர் அதற்கு முழுச் சம்மதம் தெரிவித்தார்.

இந்த சந்தோஷ தேதியை என் உறுப்பினர்களுக்கு நவம்பர் மாதம் 25 -ஆம் தேதி எங்கள் கமிட்டி மீட்டிங் நடந்தபோது சொல்லி எல்லோரையும் சந்தோஷப்பட வைத்தேன். இதே போல்தான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களிடம் சென்று நமது சங்க நல நிதிக்காக இளையராஜா சார் நிகழ்ச்சியில் நீங்கள் பாட வேண்டும் என்று சொல்ல, உடனேயே நான் வருகிறேன் என்று சொல்லி தனது உதவியாளரிடம் தேதியைச் சொல்லி குறித்துக் கொள்ள சொன்னார். என்னைப் பொருத்தவரை இருவருமே 75 வயதுக் குழந்தைகள். திரை இசைக் கலைஞர்கள் நலத்திற்காக எதுவும் செய்யக் காத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் 9 வெளிநாட்டு நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறோம் என்று சொல்லி ஒரு பெரிய தொகையை ராஜா சாரின் ராயல்டியாக முதன் முதலில் கட்டியதும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள்தான்.
 ஜூன் 2 -ஆம் தேதி நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பாடகர் யேசுதாஸ், நடிகர் கமல்ஹாசன், பாம்பே ஜெய்ஸ்ரீ, மனோ ஆகியோர் கலந்து கொண்டு பாடுகிறார்கள். புதுமையான நிகழ்ச்சியாக இருக்கும். அது மட்டுமல்லாமல் நான் தலைமை ஏற்று இருக்கும் இந்த தருணத்தில் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சி நடப்பது எனக்கு மகிழ்ச்சி மட்டும் அல்ல, பெரும் பாக்கியமாகவும் கருதுகிறேன். இதனால் சங்கத்திற்கு ஒரு புது கட்டடம் கட்ட முடிந்தால் அதை விட சந்தோஷம் வேறு என்ன? என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார் இசையமைப்பாளரும், திரை இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவருமான தினா.
 சந்திப்பு: சலன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT