சர்கார்

தீபாவளி , பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று.
சர்கார்

தீபாவளி , பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. இந்த வருட தீபாவளிக்கு விஜய் தவிர்த்து விஜய் ஆண்டனி, ஆர்.கே.சுரேஷ், விமல் ஆகியோரின் படங்கள் வெளி வருவது சிறப்பு. இந்த வருட தீபாவளி ரிலீஸ் வரிசையில் "சர்கார்', "திமிரு பிடிச்சவன்', "பில்லா பாண்டி', "களவாணி மாப்பிள்ளை' என நான்கு படங்கள் வரிசையில் நிற்கின்றன. தீபாவளி ரிலீஸ் ஆக என்னென்ன படங்கள் வருகின்றன என ஒரு க்விக் ப்ரிவ்யூ இதோ...
 கதை திருட்டு, நீதிமன்றத்தில் சமரசம் என அன்றாட செய்திகளில் ஒன்றாகி போன விஜய்யின் "சர்கார்' தீபாவளிக்கு வருகிறது. நடிகர் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அரசியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு பெரும் ஹிட் அடித்தது. முன்னதாக இப்படத்தில் நடிகர் விஜய் முதல்வராக நடிக்கிறார் என்ற தகவல் பரவி வந்த நிலையில், இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தான் அவ்வாறு நடிக்கவில்லை என மறுத்தார் விஜய். "சர்கார்' அரசியல் தொடர்பான படம் என்பதால், இது தொடர்பான விஷயங்கள் வெளியில் கசியாமல் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் கதை விவகாரம் நீதிமன்றம் வரையிலும் வந்ததால், இந்தப் படத்தின் கருப்பொருளை பற்றி அனைவராலும் யூகிக்க முடிகிறது. வெளிநாட்டிலிருந்து ஓட்டு போட வரும் விஜய்யின் ஓட்டை, யாரோ கள்ள ஓட்டு போட்டு விடுகின்றனர். அதன் விளைவாக அரசியலுக்குள் தள்ளப்படும் விஜய், இறுதியில் எடுத்த முடிவுகள் என்ன என்பதே திரைக்கதை. தீபாவளிக்கு வரும் படங்களில் அதிக எண்ணிக்கையிலான
 திரையரங்குகளில் வெளியாகிறது "சர்கார்'.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com