செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கு கரிமுகன் 

விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர்கள் செந்தில் கணேஷ் - ராஜ லட்சுமி ஜோடி.  "சின்ன மச்சான் செவத்த மச்சான்....' பாடல் மூலம் அந்த நிகழ்ச்சியின் முதல் பரிசை வென்றார்கள்.
செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கு கரிமுகன் 

விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர்கள் செந்தில் கணேஷ் - ராஜ லட்சுமி ஜோடி.  "சின்ன மச்சான் செவத்த மச்சான்....' பாடல் மூலம் அந்த நிகழ்ச்சியின் முதல் பரிசை வென்றார்கள். அதற்கு பிறகு இந்த பாடல்  "சார்லி சாப்ளின் 2'  படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது.  இணைய தளங்களில் சுமார் 13 மில்லியன் பார்வையாளர்களை இந்தப் பாடல் கடந்துள்ளது.  உலகம் முழுதும் பிரபலமான இந்த குழு   "கரிமுகன்'  என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்கள். செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கேரளத்து வரவு காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.  யோகிராம், பாவாலட்சுமணன், விஜய் கணேஷ், வின்சென்ட் ராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ விமல் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்  செல்ல தங்கையா. முன் தெரியாத  இரண்டு பேருக்குள் நடக்கிற பிரச்னைகளை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம் பெறும் நான்கு பாடல்களில் இரண்டு பாடல்களை செந்தில் கணேஷ் பாடுகிறார்.  புதுக்கோட்டை, கோட்டை பட்டினம், தேவிபட்டினம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com