காமெடி பாத்திரங்களும் வேண்டும்!

கடந்த வாரத்தில் வெளியான "வட சென்னை' படத்தின் பாத்திர படைப்புகள் அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
காமெடி பாத்திரங்களும் வேண்டும்!

கடந்த வாரத்தில் வெளியான "வட சென்னை' படத்தின் பாத்திர படைப்புகள் அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கதை சொன்ன விதத்திலும், பாத்திரங்களை தேர்வு செய்த விதத்திலும் தனித்துவமாக தெரிகிறார் இயக்குநர் வெற்றிமாறன். இதில் சிவா எனும் கதாபாத்திரத்தில் நடித்த பாவல் நவகீதன் கவனம் ஈர்க்கிறார். இது குறித்து அவர் பேசும் போது... ""செங்கல்பட்டுதான் எனக்கு பூர்வீகம். படிப்பில் கவனம் இல்லை. கற்பனை வளம் அதிகமாக இருந்தது. சென்னை லயோலாவில் விஸ்காம் படிப்பு. அப்போது சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று ஆசை. அங்கு எனக்கு சீனியரான இயக்குநர் பிரம்மாவின் நட்பு கிடைத்தது. பிறகு "நாளந்தா வே' என்ற அமைப்பில் 5 வருடம் குழந்தைகளுக்கு புகைப்படம் எடுத்தல், கதை எழுதுதல், வாழ்க்கை திறன், குறும்படம் எடுத்தல் போன்ற துறைகளில் பயிற்சியாளராக இருந்தேன். பிரம்மா தான் எடுத்த "குற்றம் கடிதல்' படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார்.
 அதன் பிறகு ரஞ்சித் "மெட்ராஸ்' படத்தில் வாய்ப்பு தந்தார். "மகளிர் மட்டும்' படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்புகள்தான் "வட சென்னை' படத்திலும் வாய்ப்பு தேடி தந்தது. சிவா கதாபாத்திரத்துக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள். அனைத்துமே வெற்றிமாறன் சாரைத்தான் சாரும். அடுத்து மம்முட்டியுடன் "பேரன்பு' படத்தில் நடிக்கிறேன். வில்லன், காமெடி என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும்
 நடிப்பதே என் விருப்பம்'' என்கிறார் பாவல் நவகீதன்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com