புதன்கிழமை 26 செப்டம்பர் 2018

மகாபாரதம் அப்டேட்!

DIN | Published: 11th September 2018 10:17 AM

"பாகுபலி' படத்துக்குப் பின் பிரபாஸ் ஹிந்தியிலும் பிரபலமானார். நேரடி ஹிந்தி படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்து வந்தார். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும் "சாஹோ' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆமிர்கான் பிரபாஸýக்கு ஓர் அழைப்பு விடுத்தார். ஆயிரம் கோடி செலவில் உருவாகும் "மகாபாரதம்' படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரை கேட்டிருக்கிறார். அந்த அழைப்பை பிரபாஸ் ஏற்றிருக்கிறார். மகாபாரதம் படத்தில் பிரபாûஸ அர்ஜுனன் வேடத்தில் நடிக்க கேட்டதாக முதலில் கூறப்பட்டது. தற்போது அவர் பீமன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் இயக்குநர் பொறுப்பை யார் ஏற்பது என்று முடிவாகாத நிலையில் இதில் நடிக்கும் நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பை ஆமீர்கான் ஏற்றிருக்கிறார். அதற்காக அவர் அமிதாப்பச்சன் முதல் ரஜினிகாந்த் வரை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
 எந்தெந்த நட்சத்திரம் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை விளக்கும் விதமாக ஒரு ஓவியர் பென்சில் ஸ்கெட்ச் வரைந்து வெளியிட்டிருக்கிறார். தசரதனாக அமிதாப்பச்சன், பீமனாக பிரபாஸ், கிருஷ்ணராக ஆமீர்கான், திரௌபதியாக தீபிகா படுகோன் இடம் பெற்றுள்ளனர். இதில் நடிக்க ரஜினிக்கு ஆமீர்கான் அழைப்பு விடுத்திருந்தார். அதை ரஜினி ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More from the section

திருக்குறளும் காகிதப் பென்சிலும்!
செண்டை மேளம் தமிழக இசை வாத்தியம்தான்!:
பிடித்த பத்து: என்னைக் கவர்ந்த நாடு!
மரங்களின் மறு நடவு!
360 டிகிரி