புதன்கிழமை 26 செப்டம்பர் 2018

360 டிகிரி

DIN | Published: 11th September 2018 10:31 AM

* திருக்குறள் அரங்கேற்றப்பட்ட இடம் மதுரை. "கம்பராமாயணம்' திருவரங்கத்திலும், "கந்தபுராணம்' காஞ்சியிலும், "பெரிய புராணம்' சிதம்பரத்திலும் அரங்கேற்றப்பட்டது.

* போதிமரம் என்பது அரசமரம், நெட்டிலிங்க மரம் என்பது அசோக மரம், பிண்டி மரம் என்பதும் அசோக மரம்தான்.

* கல்யாண முருங்கையை எரித்தாலும் பூப்பூவாய்ச் சிதறும்.
(கு.வேல் வேந்தன் எழுதிய "தெரியுமா சேதி' நூலிலிருந்து) 

* ஒரு யூனிட் ரத்தம் என்பது 350 மில்லி.

* 1949 முதல் 1952 வரை சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் குமாரசாமி ராஜா, மாநில அரசின் முத்திரையாக ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்தைப் பொறித்தவர் இவர்தான். பதவியில் இருந்து இவர் விலகிய போது இவரது வங்கிக் கணக்கில் இருந்தது எவ்வளவு தெரியுமா? 100 
ரூபாய்தான்.

* 17 ஆண்டுகள் ஆராய்ந்து பைபிள் நூல் பற்றி ஹார்டுவெல் என்பவர் கண்டறிந்து கூறியது இதுதான்: 35,66,480 எழுத்துகள் 7,73,693 சொற்கள் 31,102 வாக்கியங்கள் 1,189 விரிவுகளும் கொண்டது. 60 புத்தகங்களும், மிகப் பெரிய அத்தியாயம் 119-ம், சிறிய அத்தியாயம் 117-ம் உள்ளதாம்.

* ஓவியர்கள் பயன்படுத்தும் மையின் பெயர் "இண்டியன் இங்க்' . இது பிரான்ஸ் நாட்டில் மட்டும் "சீனா இங்க்' என்றழைக்கப்படுகிறது. மற்ற நாடுகளில் எல்லாம் இந்தியன் இங்க்' என்றே அழைக்கப்படுகிறது.
எம்.அசோக்ராஜா 

* பூமி சுற்றுவதை ஒரு விநாடி நிறுத்தினால் நாம் அனைவரும் 800 மைல் வேகத்தில் கிழக்கு திசையை நோக்கி வீசப்படுவோம். 
க.அருச்சுணன்

* "ராம ராஜ்ஜியம்' என்ற இந்திப் படத்தில் ராமர் வேடத்தில் நடித்தவர், பிரேம் அதீப் என்ற இஸ்லாமிய இளைஞராவார்.
வே.ந.கதிர்வேல் 

* டாக்ஸி ஓட்டுநர்கள் பயணிகளிடம் பேசக்கூடாது என்ற சட்டம் ஜெர்மனி நாட்டில் கட்டாயம்.
எல்.நஞ்சன்

* சிங்கத்தின் குணத்தை அதன் வாலிலிருந்து தெரிந்து கொள்ளலாம். சிங்கம் வாலை ஆட்டாமல் இருந்தால் சந்தோஷமாக இருக்கிறது என்று பொருள். வாலை பூமியில் ஓங்கி அடித்தால் மிகக் கோபமாக இருப்பதாகப் பொருள்.
ஆர்.கே.லிங்கேசன்


 

More from the section

360 டிகிரி
ஏமாந்தது யார்?
வயதானவர்களுக்கு வெல்லம்!
தொண்டன் முன் செல்ல... எம்பெருமான் உலா வர...
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 71: பிடிக்காதப் பாடல் பிரபலமானது!