விதைகள்... விருதுகள்!

குறைந்த படிப்பறிவே இருந்தாலும் தன் அனுபவத்தாலும், முயற்சிகளாலும் புதுக்கோட்டை  மாவட்டம் ஆலங்குடி வட்டம் குருந்தடிமனையில் ஒரு பெண் ஓய்வின்றி உழைத்து அவ்வூருக்கு மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்திற்கே
விதைகள்... விருதுகள்!

குறைந்த படிப்பறிவே இருந்தாலும் தன் அனுபவத்தாலும், முயற்சிகளாலும் புதுக்கோட்டை  மாவட்டம் ஆலங்குடி வட்டம் குருந்தடிமனையில் ஒரு பெண் ஓய்வின்றி உழைத்து அவ்வூருக்கு மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்திற்கே பெருமை சேர்த்து வருகிறார். குருந்தடிமனை 300க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட ஒரு சிறிய கிராமம். இவ்வூரை பொறுத்தவரைக்கும் வேளாண்மையையே நம்பியுள்ள விவசாயிகள் மிகவும் அதிகம் உள்ள பகுதி. வறட்சி மற்றும் குறைவான லாபம் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பலரும் விவசாயத்தை கைவிட்டு பிற தொழில்களுக்கு மாறிவிட்டனர். ஆனால் சில குடும்பங்கள் இன்னும் விவசாயத்தை கைவிடவில்லை. இக்கிராமத்தில் ஒரு புதிய திசையில்  பயணித்து வருபவர் க.செல்வி. 

இவரைப் பொறுத்தவரைக்கும் கிராமத் தொழில் முனைவோராக தன்னை அறிமுகப்படுத்திக்  கொண்டு வேளாண்மை, சுயதொழில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் வளர்ச்சி போன்ற பல்துறைகளில் சிறப்பாக பணியாற்றி மாவட்டத்திலும், ஒன்றியங்களிலும் நடைபெறும் அனைத்து வேளாண் சுயதொழில் சார்ந்த கருத்தரங்குகளில் பங்கேற்று சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். 

வைகறையில் ஆடு, மாடுகளை கவனித்து, வீட்டு வேலைகளை விரைவாக முடித்து வெளி கிராமங்களில் நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சாதிக்க முடியும் என்ற உயரிய எண்ணத்தை மனதில் இருத்தி வலம்வருகிறார். விவசாயத்தில் மகசூலை அதிகரிக்க வேண்டும் என்றால் புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அருகில் உள்ள வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடக்கும் விதை உற்பத்தி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டார்.  அதிலுள்ள லாபத்தை கருத்தில் கொண்டு, அதுமுதல்  விதை உற்பத்தி செய்ய முடிவு செய்தார். 

நெல்லில் திருந்திய சாகுபடி மற்றும் வம்பன் 6 ரக விதை உற்பத்தியைத் தொடங்கினார். கடந்த பட்டங்களில் அஈப 49  ரக நெல் விலை உற்பத்தியில் 3டன் அளவிற்கு ஆதார விதைகளையும், பாபட்லா வி.பி.டி 5204 நெல் ரகத்தில் 2 டன் ஆதாரவிதையும், சான்றளிக்கப்பட்ட கொளுஞ்சி விதை 1டன் அளவிற்கு உற்பத்தி செய்துள்ளார். விதை உற்பத்தி செய்த வகையில் மட்டும் ஒரு ஏக்கருக்கு நெல் அஈப 49  ரகத்தில் விதை உற்பத்தி செய்து செலவினங்கள் போக நிகர லாபமாக ரூ.33,750 ஆகவும், உளுந்து வம்பன் 6 ரக விதை உற்பத்தியில் நிகர லாபமாக ரூ.44 ஆயிரம் பெற்றுள்ளார். 

இவரின் கடின உழைப்பினால் அடைந்த வெற்றியைப்  பாராட்டும் விதமாக பல்வேறு மாநில, மாவட்ட விருதுகள் தேடி வந்தன. அவற்றுள் முக்கியமாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் - கோவை வழங்கிய மாநில அளவிலான "சிறந்த விதை உற்பத்தியாளர் விருது 2017', வேளாண்மைத்துறை வழங்கிய "சிறந்த தொழில்நுட்ப கடைப்பிடிப்பாளர் விருது',  எம்.எஸ்.சுவாமிநாதன் பவுண்டேஷன் வழங்கிய  "சாதனை வேளாண் மகளிர்'  போன்ற  விருதுகளை சொல்லலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com