தினமணி கொண்டாட்டம்

360 டிகிரி

DIN

முதல் சந்திப்பு

ஒரு முறை அறிஞர் அண்ணா பாரி நிலையத்துக்கு நூல்கள் வாங்க வந்திருந்தார். மேலே அலுவலகத்தில் மு.வ.வும் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அலுவலகம் வந்திருந்தார். அப்போது தான் அண்ணாவும் மு.வ.வும் முதன்முதலாக சந்தித்துக் கொண்டார்கள். 

மிகப்பெரிய புத்தக வெளியீட்டு விழா!

நான் நடத்திய மிகப்பெரிய புத்தக வெளியீட்டு  விழா, பேரறிஞர் அண்ணாவின் நூலான "தம்பிக்குக் கடிதங்கள்' நூல் வெளியீட்டு விழாவாகும். மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டனமான நூல்  வெளியீட்டு விழாவுக்கு ஐம்பதாயிரம் பேர்களுக்கு மேல் வந்திருந்தார்கள். 

மிகச்சிறிய புத்தக வெளியீட்டு விழா!

அதே போல் மிகச்சிறிய வெளியீட்டு விழா,  ஒன்றையும் நான் நடத்தியிருக்கிறேன் மூதறிஞர் ராஜாஜியின் “"சக்கரவர்த்தி திருமகன்'” நூல் வெளியீட்டு விழா பத்துப் பேரோடு நடத்தப்பட்டது. அந்த பத்து பேரில் இருவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், மீ.ப. சோமு.

- பாரி நிலையம் செல்லப்பன் ஒரு பேட்டியில்
 தகவல்: முல்லை. மு.பழநியப்பன்

வேண்டாமே அந்த மரியாதை!

மாவீரன் நெப்போலியன் ஒரு முறை தன்னுடைய தளபதியின் இல்லத்திற்குச் சென்றான். தளபதியோ தன் மனைவி, மக்களோடு உரையாடிக் கொண்டிருந்தார். நெப்போலியனைக் கண்டதும் தளபதி சட்டென மரியாதை நிமித்தமாக எழுந்தார். அப்போது நெப்போலியன் "உங்களுடைய பிள்ளைகளுக்கு உங்களை விட உயர்ந்தவர்கள் வேறு எவரும் இல்லை. அதனால் அவர்கள் எதிரில் எழுந்து எனக்கு மரியாதை செய்ய வேண்டாம்' என்று தளபதியை அரவணைத்து, அமர வைத்தான். தானும் அவரோடு அமர்ந்து கொண்டான்.

-ஆர்.கே.லிங்கேசன் மேலகிருஷ்ணன்புதூர்


முதல் பெண் பொருளாதார நிபுணர்

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பெண் தலைமை பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது இந்தியர் ஆவார். இப்பதவியை வகித்த முதல் இந்தியர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் 2013-2016 டாக்டர் ரகுராம் ராஜன்.

-க. ரவீந்திரன், ஈரோடு


முதல் நைலான் டூத் பிரஷ்

நைலான் இழைகளால் உருவாக்கப்பட்ட முதல் நைலான் டூத் பிரஷ்1938-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் நாள் விற்பனைக்கு வந்தது.

முதன் முதலில் ரப்பர் பேண்ட்களை உருவாக்கியது லண்டனில் உள்ள பெர்ரி அண்ட கம்பெனியாகும். உருவாக்கிய ஆண்டு 1845

விதை போட்டு பயிரிடாத ஒரே மரம் வாழைதான். 

பாட்டில்களை மூடுவதற்குப் பயன்படும் தக்கை ஒரு வகை ஒக் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த வகை மரம் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளில் காணப்படும். 

-பொ.பாலாஜி, அண்ணாமலைநகர் 

17 டாக்டர் பட்டம்!


உலகின் பதினெழு பல்கலைக்கழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் டாக்டர் ராதாகிருஷ்ணன்

-ஸ்ரீதரன், சென்னை

மாறாத கொடி!

நீண்ட காலமாக ஒரே விதமான கொடியைப் பயன்படுத்தும் நாடு டென்மார்க். 1219 முதல் அது மாறாமல் இருந்து வருகிறது.

இறந்த மனிதனின் தொடை எலும்பு மட்டும் கிடைத்தால் போதும் அதை வைத்து அவனது உயரத்தைக் கண்டுபிடித்த விட முடியும்.

ஆண் என்றால், தொடை எலும்பின் நீளத்தைப் போல் 1.88 மடங்குடன் 81.306 செ.மீ கூட்டினால் போதும் உயரம் கிடைத்து விடும்

பெண் என்றால், தொடை எலும்பின் நீளத்தைப் போல் 1.945 மடங்குடள் 72.844 செ.மீ கூட்ட வேண்டும்

சீனர்கள் பேசும் மொழி வேறு. எழுதும் மொழி வேறு. பேசும் மொழியை "யூ-யேன்' என்றும் எழுதும் மொழியை "வென்-தீச்சு' என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள். 

முதலாவது ஏர்மெயில்!

உலகின் முதலாவது ஏர்மெயில் 1911- ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி 13 நிமிடங்களில் டெலிவரி செய்யப்பட்டது. அலகாபாத்தில் இருந்து 6 மைல் தொலைவில் உள்ள தைனி ஐங்ஷனுக்கு ஹம்பர்சோமர் பைபிளேனில் ஹென்றி பெகே எடுத்துச் சென்றார்

-மோகன சுந்தரி, கிருஷ்ணகிரி

காளான் உணவுகள்

காளானைப் பயன்படுத்தி செய்யும் உணவுகள் நான்கு மணி நேரம் கழித்தே ஜீரணம் ஆகின்றன. காளான் உணவுகள் சத்துக்கள் அதிகமாக உள்ளதால் தான் இக்காரணம்.


மூங்கில்

உலகின் பழமை வாய்ந்த தாவரம் மூங்கில். பத்து கோடி ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.


- ராமநாதன், நாகர்கோவில்


அலெக்ஸாண்டர் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்து திரும்பி அவர் நாட்டிற்குச் சென்ற போது "இனிப்பான நாணல் செடி' என்று கரும்பை வியந்து சிலவற்றை எடுத்துச் சென்று அவர் நாட்டில் நட்டு வளர்த்தார். பின்னர் நாடு முழுவதும் சாகுபடி செய்ய ஏற்பாடு செய்தார்.

அலெக்ஸாண்டரின் போர் வீரர்கள் கரும்பை என்ன சொன்னார்கள் தெரியுமா? "தேனீ இல்லாமலேயே புல்லில் இருந்து தேன் வடிகிறது'. 

-ரகுபதி, போளூர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT