கிரேஸிக்குப் பிறகு நாடகம் தொடரும்!

கிரேஸி மோகன் இல்லாமல் அவரது நாடகம் நடத்த முடியுமா? என்று கேட்கிறீர்களா முடியும் என்று கூறுகிறார் அவரது தம்பியும், நடிகருமான
கிரேஸிக்குப் பிறகு நாடகம் தொடரும்!

கிரேஸி மோகன் இல்லாமல் அவரது நாடகம் நடத்த முடியுமா? என்று கேட்கிறீர்களா முடியும் என்று கூறுகிறார் அவரது தம்பியும், நடிகருமான "மாது' பாலாஜி. கிரேஸி மோகன் திரைக்கதை வசனகர்த்தா மட்டும் அல்ல, அவர் ஒரு நடிகர், கவிஞர், என்று சொல்லிக்கொண்டே போகலாம். நாடகம், சினிமா இரண்டிலும் கோலோச்சியவர். 

சுமார் இரண்டு மாமாங்கம் திரை உலகில் கொடி கட்டிப் பறந்தார். அப்பொழுதும் கிரேஸி கிரியேஷன்ஸ் நாடகங்களை விடாமல் போட்டுக் கொண்டு தான் இருந்தார். 

அவர் இருந்தே போதே பல்வேறு நாடகங்களை, எங்கள் குழு நாடாகங்களாக்கி போட்டுள்ளது. இந்த நாடகத்தில் எல்லாம் அவர் நடிக்கவே இல்லை. காரணம், 1985 - ஆம் ஆண்டு முதல் சுமார் 25 -ஆண்டு காலம் அவர் கிரேஸி  கிரியேஷன்ஸ் நாடகக் குழுவிற்கு நாடகங்கள் எழுதி மட்டுமே கொடுப்பார். அவர் நடிப்பதில்லை. காரணம் அவர் திரை துறையில் மிகவும் பிஸியாக இருந்தார். “"சாக்லேட் கிருஷ்ணா'” என்ற சமீபத்திய நாடகத்தில் மட்டும் தான் அவர் முழுமையாக நடித்தார். 

மற்றதில் எல்லாம் நேரம் இருந்தால்,  பத்து நிமிடம் வரும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்து விட்டுப் போவார். அதனால் அவர் இல்லாமல் நாங்கள் அவரது வசனங்களைக் கொண்டே நாடகத்தை நகர்த்திக் கொண்டு போவோம். இப்பொழுதும் நாங்கள் அதே மாதிரி அவரது நாடகத்தை போடப்  போகிறோம். 

கிரேஸி கிரியேஷன்ஸ் மோகன் எழுதி உள்ள நாடகங்களை விடாமல் போடுவோம். தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் எங்கள் நாடகங்கள் நடக்கும். இதைதான் அவரும் விரும்பினார். அதையே நாங்களும் நிறைவேற்ற போகிறோம்” என்று உறுதியாகக் கூறினார் "மாது' பாலாஜி.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com