திட்டமிடுங்கள்... முடிவெடுக்க!

வேலை கிடைக்கவில்லை என்று வாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வேலை ஒரு கட்டத்தில் கிடைத்துவிடும். அப்படி கிடைத்த வேலையைத் தக்க வைத்துக் கொள்ள சில ஆண்டுகள் போராட வேண்டியிருக்கும்.
திட்டமிடுங்கள்... முடிவெடுக்க!

வேலை கிடைக்கவில்லை என்று வாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வேலை ஒரு கட்டத்தில் கிடைத்துவிடும். அப்படி கிடைத்த வேலையைத் தக்க வைத்துக் கொள்ள சில ஆண்டுகள் போராட வேண்டியிருக்கும். அதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். வேலையைத் தக்க வைத்துக் கொண்ட பிறகு, அந்த நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பு வரும் வாய்ப்பு கூட சிலருக்குக் கிட்டும். அப்படித் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்டால் பல முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். முடிவெடுப்பது எப்படி?
 நாம் உணர்ச்சி வசப்பட்டிருக்கும்போது நாம் எடுக்கும் சில முடிவுகள் எப்போதும் நன்மையில் முடியாது. பல சமயங்களில் அம்முடிவுகள் தவறானதாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
 ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் தனது உயர் அதிகாரி திட்டிவிட்டார் என்பதற்காக கோபப்பட்டு பணியை விட்டுவிட்டால், பாதிக்கப்படப் போவது பணியாளரே தவிர, அதிகாரி அல்ல. எனவே கோபப்படாமல் நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். பணியாளரே உணர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், ஓர் நிறுவனத்தில் உயர் அதிகாரிகளாகப் பணிபுரிபவர்கள், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் எடுக்கும் முடிவுகள் நிறுவனத்துக்கே தீமையை விளைவிக்கும்.
 உதாரணமாக, ஓர் நிறுவனத்தில் நல்லவர், அன்பானவர் என்று பெயரெடுத்த ஒரு பணியாளர் வேலையில் நாட்டம் இல்லாதவராகவும், திறன் குறைந்தவராகவும் இருக்கிறார். அவரைப் பணியில் இருந்து நீக்க வேண்டியதுதான் நிறுவனத்துக்கு லாபத்தைத் தரும். ஆனால் அவர் நல்லவர் என்ற காரணத்துக்காக, அவர் மீது இரக்கப்பட்டு அவருடைய உயர் அதிகாரி அவரைப் பணியில் தொடரவிட்டால், அலுவலகத்துக்கு இழப்பு ஏற்படும். அதே சமயம் அந்தப் பணியாளரைத் திருத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
 திட்டமிடுதல்: ஒரு நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கும் ஒருவருக்கு நிறைய பொறுப்புகள் இருக்கும். அவர் ஒரு நாளைக்கு பல முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார். அப்போது பதற்றத்தாலும், மன அழுத்தத்தாலும் தவறான முடிவுகளை எடுக்கவும் வாய்ப்பு உண்டு. அதனால் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு அதுகுறித்து தெளிவாகத் திட்டமிட வேண்டும். .
 பிறர் கருத்தைக் கேட்பது: நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகப் பணிபுரியும் ஒருவருக்கு அந்த நிறுவனத்தின் அவரே முடிவுகளையும் அவர்களே எடுக்க வேண்டும் என்று தோன்றும். ஏனெனில் பிறர் முடிவால் ஏதேனும் தவறு நடந்து விடுமோ? என்ற பயம். ஆனால் மற்றவர்களின் கருத்துகளைக் கேட்காமல் எடுக்கப்பட்ட தனிப்பட்ட முடிவு எப்போதும் நன்மையில் முடியும் என்று கூற முடியாது. அதனால் தலைவராக இருந்தாலும், பிறரின் கருத்துகளைக் கேட்டு ஆலோசனை நடத்திய பின்பு முடிவெடுப்பதே சிறந்தது.
 பதறாத காரியம் சிதறாது: ஒரு கடினமான விஷயத்தில் முக்கியமான முடிவெடுக்கும் போது தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்களது உள்ளுணர்வின்படி சென்றால் அந்த முடிவு சிறப்பாக இருக்காது. எந்த ஒரு முடிவையும் உரிய காலம் எடுத்து நிதானமாக யோசித்து எடுக்க வேண்டும். "லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தோம்ல' என்பது போல் சிறிது நேரம் யோசித்து எடுக்கும் முடிவு நன்மையில் முடியும்.
 சரியாகவும், திட்டமிட்டும், மனத் தெளிவுடனும் முடிவெடுத்தவர்கள்தான் பின்னாளில் சாதனையாளர்களாக, நிறுவனங்களின் தலைமை அதிகாரியாக இருப்பார்கள். அதனால் ஒரு முடிவை அவசரப்பட்டு எடுத்துவிட்டு பின்பு வருத்தப்படுவதற்கு பதிலாக, நிதானமாக யோசித்து, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி முடிவெடுத்தோம் என்றால் அந்த முடிவுகள் அனைத்தும் நம் வாழ்க்கையில் வெற்றிக் கனியை பரிசாகத் தரும். தலைமைப் பொறுப்பு வர விரும்பும் இளைஞர்கள் எல்லாரும் இதை மனதில் எப்போதும் நிறுத்தி வைத்துக் கொள்வது நல்லது.
 - க. நந்தினி ரவிச்சந்திரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com