இளைஞர்மணி

சரியான பார்வை... சரியான வழி...  சரியான செயல்! - 20

தா.நெடுஞ்செழியன்


ஊட்டியிலிருந்து 6 கிமீ  தொலைவில் உள்ள லவ்டேல் என்ற இடத்தில்  "லாரன்ஸ் மிலிட்டரி அûஸலம்ஸ்' (The Lawrence Military Asylums)  என்ற தங்குமிடப் பள்ளி மேஜர் ஜெனரல் சர் ஹென்றி லாரன்ஸ் என்பவர் நினைவாகத் தொடங்கப்பட்டது.  அவர்  விக்டோரியா அரசியின் லெப்டினன்ட் கர்னலாக வேலை பார்த்தவர். "ஒட்டச்சாமன் அûஸலம் ஃபார் ஆர்பன்ஸ்' என்ற பெயரில்   பிரிட்டிஷ் ராணுவ வீரர்களின் இந்திய குழந்தைகளுக்காக இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. 

1856 ஆம் ஆண்டு  சர் ஹென்றி லாரன்ஸ் ரூ.5000  நன்கொடை கொடுத்து இந்த அனாதைக் காப்பகம் லவ்டேல் என்ற  இடத்தில்  தொடங்கப்பட்டது.  சர் ஹென்றி லாரன்ஸ் ஒவ்வோராண்டும் ரூ.1000 நன்கொடையாகக் கொடுத்துவந்தார்.  1859 ஆண்டு பிஷப் டீல்ட்ரி என்பவரால்  ரூ.22, 600 ரூபாய்க்கு "ஸ்டோன் ஹவுஸ்' -  என்ற கட்டடம் வாங்கப்பட்டு,  இந்தப் பள்ளி நடத்தப்பட்டது.  ஸ்டோன் ஹவுஸ்  என்பது 130 அடி  உயரமுள்ள இத்தாலிக் கோதிக் ஸ்டைலில் உள்ள அடர்ந்த காடுகளிடையே உள்ள கட்டடம் ஆகும்.  1913 முதல் இந்தப் பள்ளி   Maj Gen Sir Henry Lawrence Memorial School  என்ற பெயரில் இயங்கி வருகிறது.  

இந்தப் பள்ளி பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் 1949 வரை இருந்தது.     1949 செப்டம்பர் மாதம்  6 ஆம்தேதியிலிருந்து இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய அரசின்  மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ்  செயல்படுகிறது. 

இது பொதுப்பள்ளி. 40 சதவீதம்  குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. 20 சதவீதம் கட்டண மானியம் இராணுவத்தினர் குழந்தைகளுக்குத் தரப்படுகிறது.  இந்தப் பள்ளியில்  இந்தியாவின் பலதரப்பட்ட மாணவர்களும், 20 சதவீதம் வெளிநாட்டு மாணவர்களும்  படிக்கிறார்கள்.     

இந்தப் பள்ளியின்  எண்ணற்ற மாணவர்கள் கல்வியின் வாயிலாக மிக உயர்ந்த நிலைக்குச் சென்றிருக்கிறார்கள்.  உதாரணமாக,  இந்தப் பள்ளியில் பயின்ற அருண் எம்  குமார் என்பவர் ஓடஙஎ என்ற நிறுவனத்தின் இந்திய தலைவராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் உள்ளார்.

சி.விஜயகுமார்  என்பவர்  ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் தலைவராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் உள்ளார். இந்தப் பள்ளியில் பயின்ற எண்ணற்ற மாணவர்கள் தொழிலதிபர்களாகவும்,  பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றும் சிறந்த நிர்வாகிகளாகவும் உள்ளனர்.

மிகவும் ரம்மியமான இயற்கைச் சூழ்நிலையில் மாணவர்கள் இயற்கையோடு இயைந்து படிக்கும் வண்ணம் மிகவும் அழகாக இந்தப் பள்ளி 710 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.  

இதே போன்று 1858 ஆம் ஆண்டு தாமஸ் ஸ்டேன் என்பவர்  "ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இண்டியன்' என்ற பள்ளியைத் தொடங்கினார்.   கோவையிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள குன்னூரில் கடல் மட்டத்திலிருந்து 1858 உயரத்தில்   சிறியதாக இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது.   இது ஆண்- பெண் இருபாலாரும் சேர்ந்து படிக்கும்  பள்ளி.  இங்கே கல்விக்கு மட்டுமின்றி, விளையாட்டுக்கும் பிற போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும், மலைவாழ் மக்களும், தேயிலை, காப்பித் தோட்டங்களில் பணிபுரியும் மக்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக  இது  தொடங்கப்பட்டது.  மாணவர்கள் முழுமையான வளர்ச்சி பெற  வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இப்பள்ளி,    சுற்றுச் சூழலைப்  பாதுகாக்க வேண்டும் என்பதை  முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கட்டாயமாக ஏதாவது ஓர் இசையைக்  கற்றுக் கொள்ள வேண்டும். இது  அன்று முதல் இன்றுவரை தொடர்கிறது.    வாழ்க்கையில் மேன்மேலும் மாணவர்கள் உயர வேண்டும்  என்ற உயரிய நோக்கத்துடன்,  கல்வி, விளையாட்டு, இசை, பிற செயல்பாடுகளின் மூலம் மாணவர்களின் திறமைகளை வளர்க்கும்விதமாக இப்பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியின் மிகச் சிறந்த முன்னாள் மாணவர்கள்,  ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரைக் கொண்டு இதன் நிர்வாகம் மிகச் சிறந்த முறையில் இயங்கி வருகிறது.   நவீன ரோபாட்டிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்சில்  உள்ள நவீன கண்டுபிடிப்புகள் பற்றியும் இங்கே  கற்றுத் தரப்படுகிறது.  ஊட்டியில் இப்பள்ளி இப்போதும் சிறப்புடன் செயல்பட்டு விருகிறது.   

1899 ஆம் ஆண்டு  ஊட்டியில் ஹெப்ரான் ஸ்கூல் தொடங்கப்பட்டது. கிறிஸ்டியன் வொர்க்கராக இந்தியாவுக்கு செயல்பட வந்த ஒருவரால்  இந்த பள்ளி தோற்றுவிக்கப்பட்டது.  இந்தப் பள்ளியின்  10 சதவீதம் இடம்   வெல்லிங்டன் பகுதியில் பணிபுரியும் இராணுவப் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தொடக்கத்தில் பிரிட்டிஷ் பாடத்திட்டத்துடன் நடத்தப்பட்டது.  பொட்டானிகல் கார்டன் அருகில் 20 ஏக்கர் பரப்பளவில் மிக ரம்மியமான சூழ்நிலையில்,   கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளுடனும், விளையாட்டில் மாணவர்கள் சிறந்து விளங்க,  உள், வெளி விளையாட்டரங்கங்கள், நீச்சல்குளம் உள்ளிட்ட வசதிகளுடனும்  இந்தப் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. Cambridge International General Certificate of Secondary Education என்ற  உலகளாவிய பாடத்திட்டம் இங்கு  நடத்தப்படுகிறது.  இதன் தேர்வு கேம்ப்ரிட்ஜ் இண்டர்நேஷனல் தேர்வாகும்.  இதில் படித்த மாணவர்கள் உலகின் எந்த ஒரு வெளிநாட்டு கல்லூரிகளிலும் சென்று படிக்கலாம்.  ஹெப்ரான் பள்ளி 8 ஆகஸ்ட் 1913 அன்று டிபிஐ(DIRECTORATE OF PUBLIC INSTRUCTION)- இல் சர்வதேசப் பள்ளியாக ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. இது இந்தியாவின் முதல் ஐரோப்பிய  பள்ளி  என்று 1913 - இல் அங்கீகாரத்தைப்  பெற்றது.  ஏறத்தாழ இப்பள்ளியில் பயிற்றுவிக்கக் கூடிய   65 ஆசிரியர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் -  உதாரணமாக,  யுகே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, யுஎஸ்ஏ, கனடா, கென்யா, தெற்கு கொரியா, ஐரோப்பா என எல்லா நாடுகளில் இருந்தும் -  இங்கு வந்து பயிற்றுவிக்கிறார்கள்.  35 நிர்வாகப் பணியாளர்கள் உள்ளனர்.  பெரும்பான்மையான  ஆசிரியர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே பணியாற்றுகிறார்கள்.  ஆசிரியர்களுடைய குழந்தைகளும் இங்கு படிக்கிறார்கள்.  இந்தப் பள்ளியில்  படித்த மாணவர்கள்,  இந்தப் பள்ளியில் படிப்பு முடிந்ததும்,   உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்கிறார்கள். மியூசிக் துறைக் கல்வியில் உலகிலேயே சிறந்த  "இம்ப்ரீயல் காலேஜ்   லண்டன்' -  இல் படிக்கிறார்கள். பொருளாதாரம் படிக்க வேண்டும் என்றால் "லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ் - இல் படிக்கிறார்கள். 

ஊட்டியில் குன்னூரில் 1888 ஆம் ஆண்டு  பேட்ரிசியன் பிரதர்ஸ் என்று அழைக்கப்படும்  Brothers of St. Patrick - Bp St.Joseph’s College தொடங்கப்பட்டது.  கடல் மட்டத்திலிருந்து 1800  அடி உயரத்தில்  உள்ள  St.Joseph’s Boys’ Hr. Sec. School, St. Joseph’s Academy ஆகியவை தான் செயிண்ட் ஜோசப்ஸ் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. அறுபதுகள் வரை இந்தப் பள்ளியின் நிர்வாகம் ஐரீஷ் நாட்டைச் சேர்ந்தவர்களின் கைகளில்தான் இருந்தது.  குன்னூர் - வெல்லிங்டன் ரயில்நிலையங்களுக்கு நடுவில் இப்பள்ளி அமைந்துள்ளது.  கால்பந்து விளையாட்டுக்கு இந்தப் பள்ளியில் முக்கியத்துவம் தருகிறார்கள்.  

டாக்டர் பார்டூ என்பவரால்  குன்னூரில் மிகப் பெரிய இடம் வாங்கப்பட்டு இந்தப் பள்ளி நிறுவப்பட்டது. அப்போது வெல்லிங்டனில் படித்து வந்த மாணவர்கள் குன்னூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள். இந்தப் பள்ளியில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்கா ன எல்லா வசதிகளும் உள்ளன.    இங்கு ஸ்டேட் போர்டு, ஐசிஎஸ்சி,  ஐஎஸ்சி,    பாடத்திட்டங்களும்  சொல்லித் தரப்படுகின்றன.   

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் 
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT