இணைய வெளியினிலே...

இணைய வெளியினிலே...

டிசம்பர் 2004. இனி சென்னையில்தான் வேலை என்ற நிலையில் சென்னையில் வந்து இறங்கினேன். பதின்மூன்று ஆண்டுகாலம் ஓடிவிட்டது

முக நூலிலிருந்து....
• ஒரு துளி நீர் கூட...
பல அடி ஆழம் வரை 
சென்றால் தான் கிடைக்கும்.
குடிநீரை வீணாக்காதீர்கள்.
சி.பழனி வேலன்

• ஒரு மலையில் வெயில்...
ஒரு மலையில் மழை.
சிபிச்செல்வன் முத்து

• உப்பும் புளியும்
பக்குவமாய் கூடினதால்
மட்டும் உணவுக்கு
"ருசி' கிட்டி விடுவதில்லை...
அன்னமிட்டாரின் எண்ணமும் கலந்த
"ரசவாதம்' தான் நெஞ்சு நிறைகிறது.
டஸ் ரமேஷ்

• தென்னை மரங்களா...
தீக்குச்சிகளா... 
என்னமாய் சிதறிக் கிடக்கின்றன? 
"தென்னையப் பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா
கண்ணீரு'ன்னு பாடின கவிஞன்
தென்னையப் பெத்தாலும் கண்ணீர் என்று பாடுவாரா?
டிகே கலாப்ரியா

சுட்டுரையிலிருந்து...
• ஒரு நாள் எனக்கு மரணம் வரும்...
அன்று நீ என்னைப்
பார்த்து கண்ணீர் விடாதே...
எழுந்தாலும் எழுந்து விடுவேன்
"உன் கண்ணீரை' த் துடைக்க.
ஏ.நம்பிராஜன் அய்யனார்

• என் ஆசைகள் அனைத்தும்
சின்ன சின்ன ஆசைகளே...
அதனால் தானோ என்னவோ,
நிறைவேறாமலேயே போய்விடுகிறது. 
ஆசைப்படுவதில் 
ஏனடி கஞ்சத்தனம் என்று?
மென்பனி

• இந்த கல்லில் இருக்கும்
ஈரம் கூட...
என்னைக் காதலித்த
இதயங்களில் இல்லை. 
விஜய் முனியா

• எந்த ஒரு மனிதனின்
உழைப்பும் "பணமாகும்'
உழவனுடைய
உழைப்பு மட்டுமே...
மனிதனுக்கு "உணவாகும்'.
காளையன்

வலைதளத்திலிருந்து...
டிசம்பர் 2004. இனி சென்னையில்தான் வேலை என்ற நிலையில் சென்னையில் வந்து இறங்கினேன். பதின்மூன்று ஆண்டுகாலம் ஓடிவிட்டது. தொடக்கத்தில் சென்னை தந்த கலக்கம், எரிச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல. திருநெல்வேலி சொர்க்கம் என்றும் சென்னை குப்பை என்ற எண்ணமும் மனம் முழுக்க நிறைந்திருந்தது. ஒருநாள் விடுமுறை கிடைத்தாலும் எப்போது இந்த சென்னையை விட்டு ஓடுவோம் என்ற எண்ணம் மேலோங்கிய காலம். இரவு ஏழு மணிக்கு மேல் சென்னைக்குக் கொம்பும் ரத்தக்காட்டேறியின் பற்களும் முளைத்துவிடும் என்று நம்பிய காலம். சென்னையில் கண்ணில் பட்ட ஒவ்வொன்றும் எரிச்சலை மட்டுமே கொண்டு வந்தது. முறையான பேருந்து இல்லை. மரியாதை இல்லை. ஊர் முழுக்க குப்பை. நீர்ப் பிரச்சினை. இப்படியே எண்ணங்கள் ஓடும். 
மெல்ல மெல்ல சென்னை என்னை உள்வாங்கிக் கொண்டது. இப்போதும் திருநெல்வேலிக்குச் செல்வது சொர்க்கம் போன்ற ஒரு நிகழ்வுதான் என்றாலும், சென்னையை வெறுத்துச் செல்லும் காலங்கள் ஓடிப் போய்விட்டன. திருநெல்வேலியில் ஒரு வாரம் தங்கிவிட்டு வரலாம், இனி அங்கேதான் வாழ்க்கை என்றால் பைத்தியம் பிடித்துவிடும் என்ற நிலைக்கு வந்தாகிவிட்டது. சென்னை தன் கடல் போன்ற வளத்தைத் திறந்துகாட்டிவிட்டால் அக்கடலின் வசீகரத்தில் இருந்து யாராலும் வெளியேறவே முடியாது. சென்னையின் நிறம் நீலம் என்றால் நீலம் தீண்டிய உடல் இழக்க விரும்பாத போதையை சென்னை உங்களுக்குப் புகட்டும். எனக்குப் புகட்டி இருக்கிறது. 
தொடக்கத்தில் கண்ணில் பட்ட எரிச்சல்களெல்லாம், சென்னையின் குணங்கள் என்றாகிப் போகின. சென்னையின் பிரம்மாண்டத்துக்கு இணையான ஊர் தமிழ்நாட்டில் இல்லை என்று அடிக்கடி தோன்றும். சென்னைக்குள் பத்து திருநெல்வேலிகளைப் பார்க்கலாம். ஐந்து திருச்சிகளைப் பார்க்கலாம். அப்புறம் என்ன?
http://www.haranprasanna.in/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com