வேலை...வேலை...வேலை...

தேசிய காப்பீடு நிறுவனத்தில் வேலை, மாவட்ட நீதித்துறையில் வேலை, கெயில் நிறுவனத்தில் வேலை, அஞ்சல் துறையில் வேலை
வேலை...வேலை...வேலை...

தேசிய காப்பீடு நிறுவனத்தில் வேலை
பதவி: Accounts Apprentice
காலியிடங்கள்: 150
தகுதி: வணிகவியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது வணிகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.11.2018 தேதியின்படி 21 வயதிலிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்
திறனாளி விண்ணப்பதாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.nationalinsuranceindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் விவரங்கள் அறிய: https://drive.google.com/file/d/1qmQBC6YSEHYNZphsKnHR0g1crQioF8w3/view என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.11.2018

மாவட்ட நீதித்துறையில் வேலை
மொத்த காலியிடங்கள்: 80 
பதவி: ஓட்டுநர், முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுநர், நகல் பரிசோதகர், ஜெராக்ஸ் இந்திரம் இயக்குபவர், 
அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், மசால்ச்சி (Masalchi), துப்புரவு பணியாளர், கணினி இயக்குநர்), சுகாதார பணியாளர்.
தகுதி: வேலைக்கேற்ப கல்வித் தகுதி மாறுபடும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தகுதி மற்றும் இனசுழற்தி அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களோடு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், தேனி - 625 523.
கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம் ஆகிய முழுமையான விவரங்கள் அறிய: https://districts.ecourts.gov.in/sites/default/files/Advertisement%20for%20Recruitment%20to%20Fill%20up%20the%20Vacancies%20in%20Various%20Post%20in%20Theni%20Judicial%20Unit_0.pdf  என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.11.2018

கெயில் நிறுவனத்தில் வேலை 
மொத்த காலியிடங்கள்: 160 
பதவி: Junior Engineer,  Foreman,  Junior Chemist,  Junior Superintendent,  Technician, Assistant (Stores & Purchase), Accounts Assistant,  Marketing Assistant,  Assistant (HR).
வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 
தகுதி: பொறியியல் துறையில் பட்டயம், இளங்கலை பட்டம் பெற்றவர்கள், வேதியியல் துறையில் முதுகலை பட்டம், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள் என வேலைக்கேற்ப கல்வித் தகுதி மாறுபடும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://gailonline.com/careers/currentOpnning/GAIL-OPEN-MISC-5-2018/Detailed%20Advertisement%20(English).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.11.2018

அஞ்சல் துறையில் வேலை
மொத்த காலியிடங்கள்: 11 
பதவி: M.V. Mechanic (Skilled),    Copper & Tinsmith (Skilled),   M.V. Electrician (Skilled),   Tyreman (Skilled).
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100. மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Manager, Mail Motor Service, No.37, (Old No.16/1), Greams  Road, Chennai - 600 006.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tamilnadupost.nic.in/SkilledArtisan.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 3.12.2018

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் வேலை
பதவி: EXECUTIVE OFFICER, GRADE-IV
காலியிடங்கள்: 65
சம்பளம்: மாதம் ரூ.19500 - 62000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கிகரிக்கப்பட்ட தமிழ் புலவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
பதவி: EXECUTIVE OFFICER, GRADE-III
காலியிடங்கள்: 55
சம்பளம்: மாதம் ரூ.20.600 - 65,500
தகுதி: ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/notifications/2018_32_notyfn_EOGrade_IV.pdf , http://www.tnpsc.gov.in/notifications/2018_31_notyfn_EOGrade_III.pdf  ஆகிய வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 3.12.2018
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com