ஈசூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்

செய்யூர் வட்ட வருவாய்த் துறை சார்பாக, ஈசூர் கிராமச் சேவை மையத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செய்யூர் வட்ட வருவாய்த் துறை சார்பாக, ஈசூர் கிராமச் சேவை மையத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 செய்யூர் வட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், ஈசூர் கிராம மக்களின் பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை கோருவது, ஸ்மார்ட் கார்டு கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கத்தில் செய்யூர் வட்டாட்சியர் ரமா ஏற்பாட்டின்படி, வருவாய்த்துறையினர் அம்மா திட்டமுகாமை நடத்த ஏற்பாடு செய்தனர்.
 இந்த நிகழ்ச்சிக்கு தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செல்வசீலன்தலைமை வகித்தார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் சரவணன், ராமலிங்கம், கிராம வருவாய் ஆய்வாளர் ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன் வரவேற்றார். ஈசூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 39 மனுக்களை தனி வட்டாட்சியர் செல்வசீலனிடம் அளித்தனர். அவற்றில் 25 மனுக்கள் ஏற்கப்பட்டன. 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 5 மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யூர் வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com