இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

DIN

முக நூலிலிருந்து....
• இன்றையப்
பட்டியலில்
சூரியனின்
முதல் வேலை
பனியில்
முகம் பார்ப்பது
-அமுதபாரதி

• இளகின இதயம் என்றாலும்
கல்நெஞ்சு என்றாலும் 
இதயத்தின் ஒழுங்கான இயக்கமே
நம் இருப்பின் அடையாளம். 
- சாந்தா தேவி

• முட்கம்பிகளுக்குள் நிலா,
முடிந்தவரை போராடினேன் 
மீட்பதற்கு, 
கைதொட்டு காப்பாற்றும் 
தூரம் சென்றபின்.... 
நிலா சொல்கிறது... 
உன் கைகளில் ரத்தக்காயம்.... 
எனை தொட்டுவிடாதே என்று..!
- நா.நிரோஷ்

சுட்டுரையிலிருந்து...
• முன்னாடியெல்லாம் யாராவது கேள்வி கேட்டு பதில் 
தெரியலைன்னா 
தரையப் பார்த்தோம். 
இப்போ மொபைல 
பார்க்கிறோம். 
அவ்ளோ தான் சார் வாழ்க்க ????
- நாடோடி

• என்னோடு நீ இருக்கும் 
நிமிடங்கள் உறைந்து போக...
கடிகாரத்தில் இருந்து பேட்டரியை அகற்றி விட்டேன்.
- மிஸ்டர் ஆங்க்ரி

• முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்துவிட்டு விமர்சனம் 
பண்றவங்களும் முதல் தடவை ஓட்டு போட்டுவிட்டு 
வருபவர்களும் ஒன்னு..தங்களால்தான் வெற்றி என்ற 
மனப்பான்மையோடு இருப்பார்கள் ! 
- மெத்த வீட்டான்

வலைதளத்திலிருந்து...
ஒரு ஜென் கதை சொல்கிறார். சமுராய் ஒருவன் ஞானி ஒருவரிடம் சொர்க்கம் என்றால் என்ன, நரகம் என்றால் என்னவென்று விளக்கச் சொல்கிறான். "உன்னைப் போன்ற முட்டாளுக்கு எல்லாம் அதை ஏன் நான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்', என்று கேட்கிறார் ஞானி. இதனால் ஆத்திரமடையும் சமுராய் கத்தியை எடுத்துக் கொண்டு அவரைக் கொல்லப் பாய்கிறான். "இதுதான் நரகம்', என்கிறார் ஞானி. சமுராய் ஒரு கணம் தாமதிக்கிறான், உண்மை உரைக்கிறது. "இதுதான் சொர்க்கம்', என்கிறார் ஞானி. கோபம் என்பது அவலம், அறியாமை, ஞானம் அதன் எதிரிடை. மேலும், ஆத்திரப்படுபவன் சுலபமாய் சூத்திரதாரிகளின் கைப்பாவையாவான்.
https://solvanam.blog

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT