வேலை...வேலை...வேலை...

தமிழக அரசில் குரூப்-1 அதிகாரி வேலை, தமிழக அரசில் விடுதி மேலாளர்,உடற்பயிற்சி ஆசிரியர் வேலை, ரயில்வேயில் 14,033 பணியிடங்கள்... 
வேலை...வேலை...வேலை...

தமிழக அரசில் குரூப்-1 அதிகாரி வேலை
தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அதிகாரி என 139 குரூப்-1 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரி பணியையே குறிக்கோளாக கொண்டுள்ள தமிழக இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மொத்த காலியிடங்கள்: 139 
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பதவி: Deputy Collector  - 27
பதவி: Deputy Superintendent of Police  - 56
பதவி: Assistant Commissioner  - 11
பதவி: Deputy Registrar of Co-operative Societies - 13
பதவி: District Registrar  - 07
பதவி: Assistant Director of Rural Development -15
பதவி: District Employment Officer - 08
பதவி: District Officer (Fire and Rescue Services)  - 02
சம்பளம்: மாதம் ரூ.56100 - 1,77,500 
தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 01.07.2019 ஆம் தேதியின்படி 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 37 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உதவி ஆணையர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோருபவருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கட்டணம் விவரம்: முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.100 மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.350 கட்டணமாக செலுத்த வேண்டும். ஒருமுறை பதிவுக் கட்டண முறையில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.150 செலுத்த தேவையில்லை. சில பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.tnspc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.02.2019 
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 03.03.2019 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_01_notyfn_Group_I_services.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2019

தமிழக அரசில் விடுதி மேலாளர்,உடற்பயிற்சி ஆசிரியர் வேலை 
தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள 6 கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 06
பதவி: Hostel Superintendent -cum- Physical Training Officer - 06
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 01.07.2019 -ஆம் தேதியின்படி பொது பிரிவினருக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. 
தகுதி: உடற்கல்வி பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது உடற்கல்வி பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்புடன் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: தேர்வு கட்டணம் ரூ.150. ஒரு முறை பதிவு முன்பதிவு. கட்டணம் செலுத்தாதவர்கள் ரூ.150 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.04.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_02_notifyn_Hostel_Superintendent.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2019

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் டெக்னிக்கல் வேலை!
தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் நிரப்பப்பட உள்ள முதுகலை மற்றும் இளங்கலை டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 19
பதவி: Senior Technical Assistant  - 05 சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,15,700
பதவி: Junior Technical Assistant - 14
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி வயதுவரம்பு கணக்கிடப்படும். 
தகுதி: ஜவுளித் தொழில்நுட்பத் துறையில் பி.எஸ்சி., பட்டம் பெற்றவர்கள், மாநில தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி மையம் வழங்கும் டிப்ளமோ படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: ரூ.150, ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.150. ஏற்கெனவே, ஒரு முறை பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் தேர்வு கட்டணம் ரூ.150 மட்டும் ஆன்லன் மூலம் செலுத்தினால் போதும். 
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 08.02.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20.04.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/Notifications/2019_03_Notifyn_Senior_Junior_Tech_Asst.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.02.2019 

ரயில்வேயில் 14,033 பணியிடங்கள்... 
இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில் 14 ஆயிரத்து 33 இளநிலை பொறியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. இந்திய இளைஞர்கள் தங்களுக்கு ரயில்வேயில் பணிபுரிவதற்கான ஓர் அரிய வாய்ப்பாக இதனை பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம்.
மொத்த காலியிடங்கள்: 14,033
பதவி: இளநிலை பொறியாளர் (JE) - 13,034, 
பதவி: இளநிலை பொறியாளர் (JE-IT) - 49
பதவி: இளநிலை பொறியாளர் (DMS) - 456
பதவி: கெமிக்கல் - மெட்டலர்ஜிகல் அசிஸ்டெண்ட் (CMA) - 494
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், பிரிண்டிங் டெக்னாலஜி மற்றும் அதனதன் துறை சார்ந்த துறைகளில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கும், இயற்பியல், வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் கெமிக்கல் - மெட்டலர்ஜிகல் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
சம்பளம்: முதற்கட்ட சம்பளம் மாதம் ரூ.35,400 + இதர ஊதியம் வழங்கப்படும்
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு கட்டணம்: பொதுப்பிரிவினர் கட்டணமாக ரூ.500, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். முதற்கட்ட தேர்வு எழுதிய பின்பு பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.400 திரும்ப பெற்றுக்கொள்ளலாம். மற்ற விண்ணப்பத்தாரர்கள் ரூ.250 திரும்ப பெற்றுக் கொள்ளலாம். முழுமையாக விண்ணப்பம் பூர்த்தி செய்யாத மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் செலுத்திய தேர்வுக்கான கட்டணத்தை திரும்பப் பெற முடியாது. 
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முதற்கட்ட கணினி வழித் தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.rrcb.gov.in அல்லது http://www.rrbchennai.gov.in/downloads/cen03-2018-notice-30-12-2018.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2019, இரவு 11.59 மணி.
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com