இணைய வெளியினிலே...

உன்னுடைய ஈகோ, பொறாமை எண்ணங்கள் உன்னை எரிப்பதற்குள் நீ அதை எரித்து விடு.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....

உன்னுடைய ஈகோ, பொறாமை எண்ணங்கள் உன்னை எரிப்பதற்குள் நீ அதை எரித்து விடு.

- நிர்மலா பிரேம்.
 


தரகர்: இந்த டிக் டாக் வந்ததுக்கு அப்புறம் எங்க கஷ்டம் பாதியாக குறைஞ்சிடுச்சு!
ஒருவர்: எதை வச்சு அப்படி சொல்றீங்க?
தரகர்: முன்னாடி எல்லாம் நாங்க பொண்ணு போட்டோவைக் காட்டி புடிச்சிருக்கான்னு கேப்போம், இப்பல்லாம், அவங்க பொண்ணையே காட்டி முடிச்சுக் கொடுங்கன்னு கேக்கறாங்க!.
ஒருவர்: ----------!!!

- சையத்.

சாமை சோறு ஆமை ஆயுள்!
குதிரை வாலி தந்திடுமே
குறைவில்லா வாழ்வு.
கம்பங் கூழால் கால் ஊன்றி நடப்பார்!
திணை உண்டால்
தேக்கு போல் உடல் வலுவாகும்!
வரும் நோய்களை
வரகால் விரட்டுவோம்!
ராகியில் பலகாரம்
கால்சியத்தின் அதிகாரம்!
சிறு தானியத்தை உண்போம்
வளமாய் வாழ்வோம்.

- நாட்டு மருந்து சித்த மருத்துவம்



சுட்டுரையிலிருந்து...

""ஏம்ப்பா..! 60001 ரூவா கடன் வாங்கிட்டு 10006 ரூவாயைக் கொடுக்கறியே... 
ஞாயமா இது?''
""திருப்பிக் கொடுக்கறதுங்கிறது இதுதான், தெரியாதா உனக்கு..!''

- ராமச்சந்திரன்.



வண்டின் மீது உள்ள காதலை பூக்கள்,
வாசனையில் சொல்கிறது!
குழந்தை மீதுள்ள காதலை தாய்,
அரவணைப்பில் சொல்கிறாள்!
அடியே! உன் மீது உள்ள காதலை நான்
எப்படி சொல்வது?

- தமிழ்க் கவிதைகள்

கொட்டும் மழையில் 
நனைய கொடுத்து 
வைத்த குடைகளுக்கு
அவள் விரல்கள் பட்டும்
இணைய கொடுப்பினை இல்லை.. 
இடை வெளியில்!

- காளையன்!


வலைதளத்திலிருந்து...

ஒரு குட்டி கதை...

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைக்கேறியது...
கோபத்தில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.... 
வலியில் துடித்த மகனை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.
மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல் திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.
வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உட்கார்ந்துவிட்டார்.
அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருக்கிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".
மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ. 
panithuli-shankar.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com