இணைய வெளியினிலே...

செல்போன் பிரபலமான ஆரம்பகாலத்தில் ஒரு மோட்ரோலா போன் வைத்திருந்தேன்.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....
• யார் யாரோ கல்லெறிந்து போன
என் குளம்-
இப்போதுதான் தெளிகிறது.
இன்னும் கொஞ்சம் தெளியட்டும்...
அதற்குள் கல்லெறிய 
யாரும் அவசரப்படவேண்டாம்.
- கவி வளநாடன்

• திரும்பிக் கொண்டிருக்கிறது
யாருமற்று,
திணித்துக் கொண்டு போன
பேருந்து.
- இரா எட்வின்

• யெப்பா... வேற லெவல்... வேற லெவல்னு...
அடிக்கடி சொல்றீங்களே,
அது என்ன லெவல்னே 
ஒருத்தனும் சொல்ல
மாட்டிங்கறீங்களேப்பா...
- தீதும் நன்றும்

• அந்த வனம் வீசியெறிந்த 
சொற்பறவைகள்
கவிதைகளாய்ச் சிறகடிக்கின்றன... 
வானில்.
- ஆரூர் தமிழ்நாடன்

சுட்டுரையிலிருந்து...
உதறித் தள்ளியவர்களுக்கு
ஒட்டடையாகத்தான் தெரியும்...
உணர்ந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும், 
அது ஓர் உயிரின் உறைவிடம் என்பது!
- காட்டுப்பூச்சி

• ஊசியைப் பார்த்து சல்லடை சொன்னதாம்...
உன் வாயில் ஓர் ஓட்டை 
இருக்கிறது என்று. 
இதுவே இன்றைய வாழ்க்கைச்சூழல், அரசியல், 
சினிமா, இலக்கியம் எல்லாம்.
- பொன். வாசுதேவன்

• பாவம் சின்ன பசங்க...
ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த ஸ்டில்.
ஒரு ரீ ட்வீட் பண்ணுங்கோ. 
- ஆகாஷ்

• பிஸ்கட்டுக்கு ஜாம் தடவி சாப்பிட்டீங்க...
சரின்னு விட்டா பிஸ்கட்டுக்கு
சட்னி தொட்டு சாப்பிடறீங்களேடா...
அகராதி பிடிச்சவங்களா!
- கிறுக்கு

வலைதளத்திலிருந்து...
செல்போன் பிரபலமான ஆரம்பகாலத்தில் ஒரு மோட்ரோலா போன் வைத்திருந்தேன். ஜிம் போக வேண்டிய அவசியம் இல்லாமல் இரண்டரை செங்கல் சைஸுக்கு இருக்கும் அந்த ஃபோனை வைத்தே ஆர்ம்ஸ் ஏத்துவேன். மெட்ராஸ் வெய்யில் மாதிரி அதற்கு ரிங்டோன் வால்யூம் high higher highest என்று தான் இருக்கும்.
யாராவது அழைத்தால் பக்கத்திலிருப்பவரையும் சேர்த்து பதற வைக்கும். "ஆங் நல்லா இருக்கேங்க..அப்புறம் என்ன விசேஷம்' என்று ஆரம்பிக்கும் போது "படக்'கென்று கோபித்துக் கொண்டு ஆஃப் ஆகிவிடும். அதனாலேயே சார்ஜ் போட்டுக்கொண்டே பேச வேண்டிய நிர்பந்தம். ஒயர் வேறு நீளமாக வராது. குனிந்து கொண்டே பேச வேண்டி இருக்கும். அதை விட கார்ட்லெஸ் ஃபோனிலேயே நடந்து கொண்டு மொபைல் மாதிரி பேசலாம் என்பதால் இந்த சனியனுக்கு நீங்க லேண்ட் லைன்லயே கால் பண்ணுங்கன்னு சொல்லிவிடுவேன். அப்புறம் நோக்கியா வந்து கைகொடுத்தது. செல்லமாய் சத்தமே இல்லாமல் சிணுங்கும். பேட்டரியும் ஒரு நாள் முழுக்க வரும். கேமிரா கலர் ஸ்க்ரீன் என்று டெக்னாலஜி வளர்ந்து எங்கேயோ போய் விட்ட போதும் ரொம்ப நாள் ப்ளாக் அண்ட் வொயிட் நோக்கியாவிலேயே இருந்தேன். 
அப்புறம் சோனி, சாம்சங் என்று பலதும் வந்து போனாலும் எல்லா மாடல்களுமே மார்க்கெட்டிற்கு வந்து பழசாகி இரண்டு வருடங்கள் கழித்தே பிராப்தியாகியிருக்கின்றன. "இந்த ஃபோனா வைச்சிருக்கீங்க?'ன்னு துக்கம் கேட்கும் அளவிற்கு சில போன் மாடல்கள் வைத்திருந்திருக்கிறேன். சமீபத்தில் தற்போதைய லேட்டஸ்ட் மாடலான சாம்சங் கேலக்ஸி S3 LTE வாங்கினேன். போன் வந்ததிலிருந்து "நீங்க என்ன மாடல் போன் வைச்சிருக்கீங்க?' என்று பார்ப்பவரை எல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். 
http://dubukku.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com