மீம்ஸ்களுக்காக தனி ஆப்!

திரைப்படங்களில் பஞ்ச் டயலாக் இடம் பெறுவதைப்போல், புகைப்படங்களில் பஞ்ச் டயலாக்குடன் இடம்பெறும் மீம்ஸ்கள் நம்மைச் சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கின்றன.
மீம்ஸ்களுக்காக தனி ஆப்!

திரைப்படங்களில் பஞ்ச் டயலாக் இடம் பெறுவதைப்போல், புகைப்படங்களில் பஞ்ச் டயலாக்குடன் இடம்பெறும் மீம்ஸ்கள் நம்மைச் சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கின்றன. அரசியல், திரையுலகம், நாட்டு நடப்பு என அனைத்து தினந்தோறும் நடப்புகளையும் குறிப்பிட்டு வரும் இந்த மீம்ஸ்கள் வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக் ஆகியவற்றில் வைரலாகப் பரவி வருகின்றன.
அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், திரையுலகப் பிரபலங்கள் என மீம்ஸ்களுக்கு அஞ்சாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்ற நிலைக்கு கருத்து சுதந்திரம் இப்போது பரவியிருக்கிறது. 
இந்த மீம்ஸ்களுக்காக "லோல்' (LOL) என்ற தனி ஆப்பைத் தொடங்க ஃபேஸ் புக் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபேஸ் புக் நிறுவனம், சமூக வலைத்தளத்தின் சாம்ராஜ்ஜியமாக திகழ்ந்து வருகிறது. எனினும், டிக்டாக், ரெடிட், இன்ஸ்டாகிராம், ஸ்னாப் சாட் போன்ற அண்மைக்கால ஆப்களால் ஃபேஸ் புக் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகச் சரிந்து வருகிறது.
இதற்கு ஃபேஸ் புக் நிறுவனம் தொடங்கப்பட்டபோது உறுப்பினர்களாக இருந்தவர்கள் தற்போது குடும்பஸ்தர்களாகும் வயதை அடைந்திருப்பதும், தற்கால இளைஞர்களுக்கு ஏற்ப மாற்றங்களைக் கொண்டு வராததும் தான் காரணம் என்று ஃபேஸ் புக் நிறுவனம் கருதுகிறது.
ஆகையால், தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பாக பகிரப்படும் மீம்ஸ்களுக்காக தனி ஆப்பையோ அல்லது ஃபேஸ் புக்கிலேயே தனிப் பக்கத்தையோ அறிமுகம் செய்யும் பணியை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்காக சுமார் 100 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களிடம் இந்த ஆப்பை சோதனை முறையில் செயல்படுத்தி வருகிறது. 
ஃபேஸ் புக்கிலேயே புதிய பக்கத்தை உருவாக்கி உலகம் முழுவதும் பகிரப்படும் மீம்ஸ்கள், சிறு ஜிஃப் பைல்கள் போன்றவற்றைக் காணவும், பகிரவும் அந்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. 
எனினும், இந்த "லோல்' ஆப் எப்போது வரும்; எந்த வடிவில் வரும் என்பதை ஃபேஸ் புக் நிறுவனம் வெளியிடவில்லை. மீம்ஸ்களைக் கொண்ட இந்த "லோல்' ஆப் அளவில்லாத பொழுதுபோக்கைத் தரும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் போலியான, பிறரது மனங்களைப் புண்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் மீம்ஸ்களை தவிர்ப்பது சாலச் சிறந்தது.
- அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com