இளைஞர்மணி

வங்கியில் கல்விக் கடன்!

DIN

வங்கியில் கல்விக்கடன் பெறுவது என்பது மாணவர்களுக்கு மிகவும் சவாலாக மாறிவிட்ட இன்றைய நிலையில், அதை எளிதில் பெறும் நடைமுறைகள் குறித்து முன்னாள் மத்திய அரசு வழக்குரைஞர் பி. ஜவாஹர்லால் நேரு விவரிக்கிறார். 
வங்கியில் கல்விக்கடன் பெற இயன்றவரை இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்க விரும்பினால், அதற்கான விண்ணப்பம், தேவையான ஆவணங்களின் பட்டியலையும் முதலில் பெறவேண்டும். 
விண்ணப்பத்தைத் தெளிவான கையெழுத்தில் பூர்த்தி செய்து, உரிய ஆவண நகல்களுடன் 3 தொகுப்புகளாகத் தயார் செய்யவேண்டும். ஒரு தொகுப்பை வங்கி மேலாளரிடம் அளித்து, அவரது கையொப்பம் மற்றும் தேதியுடன்கூடிய ஒப்புதல் கடிதம் பெறவேண்டும். ஒப்புதல் கடிதம் அளிக்காவிட்டால், மற்றொரு தொகுப்பை அவருக்கு ஒப்புதலுடன்கூடிய பதிவு தபால் மூலம் (RPAD)அஞ்சலில் அனுப்பவேண்டும். மூன்றாவது தொகுப்பை கையிருப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்.
பதிவுத் தபாலில் ஏன் அனுப்பவேண்டும்?
வங்கி மேலாளரின் பணிச்சுமை காரணமாக விண்ணப்பத்தை ஏதாவது ஓர் இடத்தில் வைத்துவிடலாம் அல்லது விண்ணப்பம் பெற்றதையே மறந்துவிடலாம் அல்லது அலையவிடும் எண்ணத்தில் இருக்கலாம். எனவே, அதைத் தவிர்ப்பதற்கு பதிவுத் தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதே சிறந்தது.
விண்ணப்பம் அனுப்பிய மறுவாரம் வங்கிக்குச் சென்று விண்ணப்பத்திலோ , சமர்ப்பித்த ஆவணங்களிலோ ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை சரி செய்து கொடுத்துவிட்டு, விண்ணப்பத்திற்கான பதிவு எண்/குறிப்பு எண்ணை(REFERENCE NUMBER) பெறவேண்டும். வங்கி மேலாளர், கல்விக்கடன் தொகை மற்றும் கடன் வழங்கும் தேதியை 15-30 நாள்களுக்குள் தெரிவிப்பார். குறிப்பிட்ட நாளில் கல்விக்கடன் கிடைக்கும். இதுவே எல்லா வங்கிகளுக்குமான பொதுவான நடைமுறை.
ஆனால், அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தும் 30 நாள்களுக்குமேல் தாமதித்தாலோ அல்லது அலைக்கழித்தாலோ, முறையான பதிலைத் தெரிவிக்கவில்லை என்றாலோ அந்த வங்கியின் மண்டல மேலாளருக்கு(REGIONAL MANAGER) புகார் அனுப்பவேண்டும். புகார் மனு ஆங்கிலத்தில் இருப்பது நன்று.
புகார் மனுவைக் கையால் எழுதியோ, தட்டச்சு செய்தோ ஒப்புதலுடன்கூடிய பதிவுத் தபாலில் மட்டுமே அனுப்பவேண்டும். மண்டல மேலாளரின் மின்னஞ்சல் முகவரி இருந்தால், மின்னஞ்சலிலும் புகாரை அனுப்பலாம்.
மண்டல மேலாளருக்குப் புகார் அனுப்பிய 15 நாள்களுக்குள் தீர்வு கிடைக்கும். கிடைக்காவிடில், பின்வரும் 3 உயர் அலுவலர்களுக்குத் தனித்தனியாக ஒப்புதலுடன்கூடிய பதிவுத் தபாலில் புகார் அனுப்பவேண்டும். ஏனெனில், ஒருவருக்கு மட்டும் அனுப்பிவிட்டு அதன் நகலை மற்ற இருவருக்கும் அனுப்பலாமே என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். ஒருவருக்கு அனுப்பப்பட்ட புகார் மனுவின் நகலை மற்றவர் பெறும்போது நடவடிக்கை தாமதமாகலாம். அதைத் தவிர்க்கவே புகார் மனுவின் பெறுநர் முகவரியை மட்டும் மாற்றம் செய்து, 3 புகார் மனுக்களைத் தனித்தனியாக தயார் செய்து கையொப்பமிட்டு, ஒப்புகையுடன்கூடிய பதிவுத் தபாலில் அனுப்பவேண்டும்.
முகவரி:
1. office of the banking ombudsman 
reserve bank of india
2nd floor, no. 16, rajaji salai,
chennai- 600001.
ph: 044-25395964/58/59/70
email: bochennai@rbi.org.in
2. the officer incharge
banking services grievances cell
rbi complex
chennai- 600001.
ph: 044-25399170/25395963
fax: 044-25395488
3. chief general manager
rpcd reserve bank of india
central office building
10th floor shahi bhagath singh marg,
mumbai- 400001
ph: 022-22610261.
என்னென்ன சான்றிதழ்கள், ஆவணங்கள் தரவேண்டும்?
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், முகவரி சான்றுக்காக குடும்ப அட்டை, பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூ. 4,50,000க்குள் இருந்தால் வட்டாட்சியர் தகுதியில் இருக்கும் அரசு அதிகாரி ஒப்பளித்த வருமானச் சான்றிதழ் சமர்ப்பிக்கவேண்டும். இத்துடன் கல்லூரியில் சேர்ந்ததற்கு சான்றாக அட்மிஷன் கார்டு, மொத்தமாக எவ்வளவு செலவாகும் என்பதற்காக மதிப்பீடு(estimate) ஆகியவையும் தர வேண்டும்.
கடனுக்குப் பிணை அல்லது உத்தரவாதம்:
கடன்தொகை ரூ. 7.5 லட்சம் வரை இருந்தால், பிணையமோ, உத்தரவாதமோ தேவையில்லை. ரூ. 7.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை இருந்தால் சொத்து பிணை வைக்கவேண்டியிருக்கும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் கல்விக்கடன் பெறமுடியும் என்றெல்லாம் இல்லை. அண்ணன் கடன் வாங்கியிருந்தால் தம்பிக்கோ, தங்கைக்கோ கடன் தரமுடியாது என எந்த வங்கியும் மறுக்கமுடியாது. ஆனால், கடன்தொகை அண்ணன், தம்பிக்கும் சேர்ந்து ரூ. 7.5 லட்சத்துக்கு மேல் செல்லுமேயானால் பிணை, வைப்பு ஆகிய விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும்.
நினைவில் கொள்ள...
முதல்படி: கல்விக்கடன் கேட்டு உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் விண்ணப்பம் அளித்தல், மற்ற புகார்களுக்கும் மனு அளித்தல், அதன்பிறகு 15-30 நாள்களில் தீர்வு கிடைக்காவிடில்,
இரண்டாம் படி: மண்டல மேலாளருக்கு புகார் அனுப்பவேண்டும். 15 நாள்களில் தீர்வு கிடைக்காவிடில், 
மூன்றாம் படி: உயர் அலுவலர்களுக்குப் புகார் அனுப்பவேண்டும். 30 நாள்கள் கடந்தும் தீர்வு கிடைக்காவிடில், 
நான்காம் படி: உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை(ஜ்ழ்ண்ற்)மூலம் நிச்சயம் தீர்வு பெறலாம்.

- கே.முருகேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT