கர்ப்ப கால சந்தேகங்கள்...

கர்ப்பமாக இருக்கும்போது சூடான பானங்கள் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு சூடு தெரியுமா?
கர்ப்ப கால சந்தேகங்கள்...

இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால் குழந்தை கறுப்பாக பிறக்குமாமே?
தாய் சேய் இருவருக்கும் இரும்புச்சத்து மிக அவசியம். அதுதான் ரத்த சோகை வராமல் காக்கும்.
கர்ப்பத்திலுள்ள குழந்தையின் கல்லீரலில் இரும்புச்சத்து சேர்த்து வைக்கப்படுவதால் பிறந்த பிறகு முதல் 3 மாதங்களுக்கு இச்சத்தையே குழந்தை பயன்படுத்திக் கொள்கிறது. குழந்தை கருப்பாகப் பிறப்பதற்கு, இரும்புச்சத்து, மாத்திரைகள் மற்றும் டானிக் ஆகியவை எந்த வகையிலும் காரணமில்லை.
குழந்தையின் சரும நிறம், வடிவம், உடல்வாகு, அறிவுத்திறன் மற்றும் குணங்கள் ஆகிய அனைத்தும் பெற்றோரிடமிருந்து வருபவையே.

கர்ப்பமாக இருக்கும்போது சூடான பானங்கள் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு சூடு தெரியுமா?
கர்ப்பிணிகள் என்றில்லை, பொதுவாகவே மிதமிஞ்சிய சூட்டில் பானம் - உணவுப் பொருள்களை சாப்பிடும் பழக்கம், ஒரு சிலருக்கு இருக்கலாம். அப்படி சாப்பிடும்போது உணவுக்குழாய் புண்ணாகி அல்சர் வர வாய்ப்புள்ளது.

கர்ப்பிணிகள் சர்க்கரைக்குப் பதிலாக தேன் கலந்து சாப்பிடலாமா?
தேனில் ஆன்ட்டி - ஆக்சிடன்டுகள் அதிகமிருப்பதால் ஆக்ஸிஜன் ப்ரீ - ரேடிக்சின்களைக் கட்டுப்படுத்தி, மூளை, இதயத்திற்குச் செல்லும் ரத்தக்குழாய் செல்களை ஒழுங்காக இயங்க வைக்கும்.
இரத்த சர்க்கரை அளவில் இன்சுலின் குறைவாக இருப்பவர்கள், சர்க்கரைக்குப் பதிலாக தேன் பயன்படுத்தலாம். இது "இரத்த சர்க்கரை' அதிகமாக இருப்போருக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் அதிகரித்து, வயிற்றில் இருக்கும் குழந்தை பாதிக்கப்படும்.

கர்ப்ப காலத்தில் கார்போ ஹைட்ரேட்டு மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை கூடுமா?
இது முற்றிலும் தவறு. வயிற்றிலிருக்கும் குழந்தையின் போஷாக்கிற்கு கார்போ ஹைட்ரேட்டுகள் மிகவும் அவசியம்.
உடம்பின் ரத்த சிவப்பணுக்கள் மற்றும் மூளை செல்கள் ஆகியவை, தங்களுக்கான இயங்கு சக்திக்கு கார்போ ஹைட்ரேட்டுகளையே பெரிதும் நம்பி உள்ளன.
இவற்றை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, நீங்களாகவே ஒரு டயட் பின்பற்றினால், உடம்பில் மாவுச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு கர்ப்பகால மலச்சிக்கல், மார்னிங் சிக்னஸ் போன்ற அவதிகள் வரும்.

கர்ப்பகாலத்தில் ரத்தத்தில் இன்சுலின் - உப்பின் அளவு திடீரென்று கூடுவது ஏன்?
சிலருக்கு ஒபிசிட்டி - மரபியல் காரணமாக இப்படி நிகழலாம். அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ இரத்த சர்க்கரை இருந்து, அது அம்மாவின் வழியாக கருவில் இருக்கும் குழந்தைக்கும் பரவ வாய்ப்பு உண்டு.
அப்படி பரவும்போது குறைப்பிரசவம், கருப்பையிலேயே குழந்தை இறந்து போதல் போன்ற சிக்கல்கள் ஏற்படும் கருவில் இருக்கும் குழந்தைக்கு அம்மாவின் மூலமாக ரத்தத்தில் உப்பின் அளவு அதிகமாவது "இன்ட்ராயூட்டரின் குரோத்ரி டார்டேஷன்'. 
உப்பின் அளவு அதிகரிப்பால், கருவிலேயே குழந்தை இறந்துவிடும் நிலைக்கு "இன்ட்ராயூட்டரின் டெத்' என்று பெயர். அதனால் கர்ப்ப காலங்களில் குறிப்பிட்ட இடைவெளியில், தொடர்ந்து "செக்-அப்' செய்து வர வேண்டும்.

கருவைச் சுமந்திருக்கும் பெண்கள் மல்லாக்க படுத்தால், கருவை நஞ்சுக்கொடி சுற்றிக் கொள்ளும் என்கிறார்களே, உண்மையா? எப்படி படுக்க வேண்டும்?
மல்லாந்த நிலையில் படுக்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் அதற்காக கூறப்படும் காரணம்தான் சரியல்ல.
மல்லாந்த நிலையில் படுத்தால், கனமான கருப்பை இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களை அழுத்தும்.
அப்போது இதயத்துக்குத் தேவையான ரத்தம் போய்ச் சேராமல் பி.பி. இறங்கும். இதனால் தலைசுற்றி மயக்கம் வரும். இடது பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய் - சேய் இருவருக்கும் நல்லது.

பவித்ரா எழுதிய "பெண்களுக்கான கர்ப்ப  கால ஆலோசனைகள்' நூலிலிருந்து... 
 வெளியீடு: 
அருணா பப்ளிகேஷன், 
சென்னை.

பெண்கள், குழந்தைகள் நலன் குறித்த 
உங்கள் சந்தேகங்களை கேள்விகளாகத்  தொடுக்கலாம்.
பிரபல பெண் மருத்துவர்கள் 
பதிலளிக்கிறார்கள்!
கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி:
"டாக்டரைக் கேளுங்கள்'
தினமணி-மகளிர்மணி,
29,2ஆவது பிரதான சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை-600058 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com