சாலட் சில டிப்ஸ்கள்!

சாலட்டில் தயிர் சேர்ப்பதற்குப் பதிலாக தேங்காய் , மாங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவைகளை அரைத்து சேர்க்கலாம்.
சாலட் சில டிப்ஸ்கள்!

• காளான், குடைமிளகாய், கேரட், செலரி போன்றவைகள் சேர்த்து சாலட் தயாரிக்கலாம். இவற்றில் எலுமிச்சை சாறும் சோயா சாஸும் சேர்க்க வேண்டும்.
• வாழைத்தண்டை சிறியதாக நறுக்கி ஒரு கிண்ணம் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். கடுகை இடித்து சேர்த்து புளிக்காத தயிரும் சேர்த்து சாலட் செய்யலாம்.
• சாலட்டில் தயிர் சேர்ப்பதற்குப் பதிலாக தேங்காய் , மாங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவைகளை அரைத்து சேர்க்கலாம்.
• புரூட் சாலட்டில் நிறம் மங்காமல் இருக்க பழவகைகளில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்தால் போதும்.
• சிறிதளவு பாலாடைக் கட்டியைத் துருவி சாலட்டில் சேர்த்தால் அதிக சுவை கிடைக்கும்.
• தேன், பால், நெய் கலந்து அதில் பழங்களைச் சேர்த்து முந்திரி பருப்பு, கிஸ்மிஸ், பேரீச்சம்பழம் ஆகியவை சேர்த்தும் சாலட் தயாரிக்கலாம்.
• வெஜிடபிள் சாலட்டில் சாலட் ஆயில் சேர்ப்பதற்கு பதில் தேங்காய் எண்ணெய்யும், வினிகரும் சிறிதளவு சேர்க்கலாம். பெரிய வெங்காயத்தை சிறிதாக நறுக்கி பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை போன்றவைகளையும் மிகச் சிறியதாக நறுக்கி தயிரும், உப்பும் கலந்தால் சாலட் சுவையாக இருக்கும்.
• கேரட்டை பொடியாக நறுக்கி தேங்காயை அரைத்து நறுக்கிய பச்சைமிளகாயும், தயிரும் சேர்த்தும் சாலட் தயாரிக்கலாம்.
• உருளைக்கிழங்கை வேக வைத்தும் பெரிய வெங்காயத்தை அதில் நறுக்கி சேர்த்தும் சாலட் தயாரிக்கலாம்.
• வெஜிடபிள் சாலாட்டில் இஞ்சியைப் பொடியாக நறுக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும்.
• பப்பாளி, ஆப்பிள், திராட்சை, மாம்பழம், ஆரஞ்சு அன்னாசிப்பழம் போன்றவை சேர்த்தும் சாலட் தயாரிக்கலாம். இதில் நேந்திரன் பழத்தையும் நறுக்கி சேர்த்து தேனும் கலந்திட வேண்டும்.
• புரூட் சாலட்டில் எலுமிச்சை தோலை சுரண்டி சேர்க்கலாம் அல்லது இஞ்சிச்சாறு சேர்க்கலாம்.
• புரூட் சாலட்டில் வாழைப்பழம் சேர்த்தால் அந்த மணமே தூக்கலாக இருக்கும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேருங்கள். புரூட் சாலட் ருசி அதிகரிக்கும்.
- ஆர். ராமலட்சுமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com