செவ்வாய்க்கிழமை 18 செப்டம்பர் 2018

வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா!

By - கண்ணன்| DIN | Published: 12th September 2018 09:01 PM

ஃபேஷன் டிசைனிங்கிற்குப் புகழ்பெற்ற  "நிப்ட்'  கல்லூரியில் பட்டம் பெற்று  ஆடு வளர்ப்பில் ஈடுபட முடிவெடுத்த ஸ்வேதாவின் வெற்றிக் கதை:

கடந்த 2015-இல் திருமணமாகி கணவருடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்த ஸ்வேதாவின் பயணம் அப்போது தான் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் அவர் ஒரு வெற்றிகரமான  ஃபேஷன் டிசைனராகத் திகழ்ந்தார். 

பின்னர், பெங்களூரில் உள்ள சுகபோகமான வாழ்க்கையைத் துறந்து, உத்தரகாண்ட்  மாநிலத்தின் டேராடூன் அருகிலுள்ள ராணிபோக்ரி என்ற சிறு கிராமத்திற்குச் சென்றார். அங்கு ஆடு வளர்ப்பு தொழிலைத் துவங்க தனது மொத்த சேமிப்பையும் முதலீடு செய்தது மட்டுமில்லாமல், தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடனையும் பெற்றார்.

வங்கிக்கடன் பெற்றுத் துவக்கத்தில் 250 ஆடுகளுடன் தொழிலை துவங்கினார். இவரது பண்ணையில் ஜம்னாபாரி -டோடாபாரி முதல் சிரோகி- பர்பாரி வரை நாட்டு ஆடு ரகங்கள் மட்டுமே உள்ளன.

ஆடுகளுக்கு முறையான பாதுகாப்பும், ஊட்டச்சத்தும் கிடைப்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்கிறார் ஸ்வேதா. சில நேரங்களில் அவரே ஆடுகளைச் சந்தைகளுக்குக் கூட்டிச் செல்கிறார். பாரம்பரிய சந்தையுடன் சேர்த்து, இணையதளங்களில் கூட  ஆடுகளை விற்கிறார்.

முதல் வருடமே அசத்தல்.  கடந்த ஆண்டு ஸ்வேதா ரூ.25 லட்சம் விற்றுமுதலாகப் பெற்றார். மேலும் மற்றவர்கள் சொந்தத் தொழில் துவங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில் தனது பண்ணையில் பயிற்சி வகுப்புகளையும் நடத்த துவங்கி எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் ஸ்வேதா. 

இவர், ""செய்யும் தொழிலே தெய்வம்' என்ற முன்னோர் வாக்கிற்கிணங்கச் செய்யும் தொழிலை விரும்பிச் செய்தால் வாழ்வின் உயரங்களை அடைய முடியும்''  என்று அழுத்தமாகச் சொல்கிறார்.

More from the section

இது புதுசு
வாஜ்பாயும் ஹிந்தி சினிமாவும்!
பன்முக ஆளுமை!
தினமணியின் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்: இமயமலை ஏறிய தந்தையும், மகளும்!
மாடலாக அமிதாப்பச்சனின் மகளும் பேத்தியும்..!