இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-24

"இந்த வாரம் நாம்   பார்க்கப் போவது பாரம்பரியம் மிக்க  தொழில்.  அதாவது, என்னதான்   நவநாகரிகம்  அதிகம்  ஏற்பட்டாலும் தம்  மகள், மகன் திருமணம் என்று வந்தவுடன்  அவரவர் மதத்திற்கு  ஏற்றாற்போன்று  சாஸ்திரம்
இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-24

""இந்த வாரம் நாம்   பார்க்கப் போவது பாரம்பரியம் மிக்க  தொழில்.  அதாவது, என்னதான்   நவநாகரிகம்  அதிகம்  ஏற்பட்டாலும் தம்  மகள், மகன் திருமணம் என்று வந்தவுடன்  அவரவர் மதத்திற்கு  ஏற்றாற்போன்று  சாஸ்திரம், சம்பிரதாயம் படிதான்  திருமணம் செய்வர்.  அதிலும்  குறிப்பாக   வரிசை தட்டு, ஆரத்தி தட்டு,  காசி யாத்திரை  குடை,  தலைப்பாகை,  பட்டம், ரெடிமேட்  கூந்தல் அலங்காரம்  ஆகியவற்றில்  அதிக கவனம் செலுத்துவோம்.  இதில்  நம்முடைய கௌரவம்,  அந்தஸ்து வெளிப்படும்.  அதனால்  போட்டி  போட்டுக்  கொண்டு அதைத் தேடி  கண்டு பிடித்து  வாங்கி வருவோம்.  இவற்றிற்கு  எப்போதும் தேவை இருந்து  கொண்டே  இருப்பதால்  இதையே  ஏன் நாம் ஒரு தொழிலாக  எடுத்து  செய்யலாம்.  அது எப்படி  என பார்ப்போம்''  என்கிறார் சுய  தொழில் ஆலோசகர் உமாராஜ்.

வரிசை தட்டு: வரிசை தட்டு என்றவுடன்,  நினைவுக்கு  வருவது,  சில ஆண்டுகளுக்கு முன்  ஒரு முஸ்லிம் வீட்டின்  திருமணத்திற்கு வரிசை  தட்டுகளை பேக் செய்து  தரும்படி  கேட்டார்கள். அது  சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.  அவர்கள் விரும்பிய படியே வித்தியாசமாக சுமார் 35 தட்டுகள் பேக் செய்து கொடுத்தோம்.  11 மணிக்குச் சென்ற நாங்கள் 3 மணிக்கு வேலையை முடித்துவிட்டு திரும்பிவிட்டோம்.  அதற்கு எங்களுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?  ரூ. 4,500.  வெறும் பேக்கிங் தானே என்று எண்ணாமல் அந்த வேலையை  செய்ததால் 3 மணி நேரத்தில் நல்ல தொகை  கிடைத்தது.   இதில் நிறைய வகையான பேக்கிங் இருக்கிறது. மேலும் அவரவர் கற்பனைக் கேற்றவாறும் செய்யலாம். இதைக் கற்றுக் கொண்டால் இதையும் ஒரு தொழிலாக எடுத்து செய்யலாம்.  நல்ல வருமானம் கிடைக்கும். திருமண கான்ட்ராக்டர்களோடு இணைந்து செய்தால் நிறைய ஆர்டர்கள் நிச்சயம் கிடைக்கும். 

வரிசை தட்டு எப்படி செய்து என்று பார்ப்போம்:    ஹார்ட் போர்டு வாங்கி வந்து தேவையான அளவில்  சதுரமாக  வெட்டிக் கொள்ள வேண்டும்.  பின் நான்கு புறமும் 2 அங்குலம் அளவு தனியாக  வெட்டி நான்கு புறமும்  ட்ரே போன்று ஒட்டிக் கொள்ள வேண்டும்.  இப்போது  வேறு ஒரு  ஹார்ட் போர்டில்   நமக்கு தேவையான வடிவத்தை  உதாரணமாக மயில், அன்னம் போன்ற விரும்பிய வடிவத்தை வெட்டிக் கொள்ளுங்கள்.  பிறகு ட்ரேயின்   பக்கவாட்டில்   அதனை ஒட்டிவிட்டு பின் இதற்கு தேவையான வர்ணம் அடித்து, ஸ்டோன் கொண்டு அழகு படுத்தலாம். இதே போன்று உங்கள் கற்பனைக்கு ஏற்றாற்போல் நீங்கள் செய்யலாமே.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com