"மன் மார்ஸியான்' என்ற படத்தில் உங்களுக்கு வித்தியாசமாக பாங்ரா நடனத்தை ஆடும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். இதை உங்களுக்கு பயிற்சியளிக்கப் போகிறவர்கள் தமிழ் திரையுலகை சேர்ந்த நடன இயக்குநர்கள்'' என்று இப்படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியபோது, வேடிக்கைக்காக சொல்கிறார் என்று நினைத்தேன். பின்னர், தமிழ் திரையுலக ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரின் மகள்கள் நவதேவி மற்றும் நவலட்சுமி ஆகியோர் வந்து எனக்கு பாங்ரா நடன பயிற்சியளித்து ஆடவைத்தபோது ஆச்சரியமாக இருந்தது'' என்று கூறும் தாப்ஸி பன்னு நடித்த "மன்மார்ஸியான்' சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது.
- அருண்