மகளிர்மணி

பொங்கல் டிப்ஸ்..

DIN


* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, வெல்லத்தை அப்படியே  சேர்ப்பதற்கு பதில்  வெல்லப்பாகு காய்ச்சி  சேர்த்தால்   சுவை கூடுதலாகவும்,  நீண்ட நேரம்  கெட்டுப்போகாமலும் இருக்கும்.

* இனிப்பு   பொங்கல் செய்யும்போது மொத்தமாக நெய் விடாமல்,  பரிமாறும்போது  பொங்கலின் மீது சிறது நெய் ஊற்றி பரிமாறினால்  நெய் மணமும், சுவையும்  கூடுதலாக இருக்கும்.

* தண்ணீருடன்,  சிறிது   பால் அல்லது  மில்க்மெய்ட்  சேர்த்து  பொங்கல் செய்தால்   சுவை கூடும்.

* சர்க்கரைப் பொங்கல்   பரிமாறும்  போது,  மேலாக  சிறிது  தேங்காய்த் துருவல்,  பொடியாக நறுக்கிய வாழைப்பழம் சேர்த்துக் கொடுக்கலாம்.

* முழு அரிசியில்  பொங்கல் செய்யாமல்,  மிக்சியில்  அரிசியை  ஒன்றிரண்டாக   உடைத்து   செய்தால் விரைவில் வெந்துவிடும். நல்ல குழைவாகவும் இருக்கும். 

* முந்திரி, பாதாமை ஒடித்து போடாமல், மிக்ஸியில்   கரகரப்பாக பொடித்து சேர்த்தால்  இனிப்பு பொங்கலில் சுவை கூடுதலாக இருக்கும். 

* பச்சரிசிக்குப்  பதில், வரகு, சாமை, குதிரை வாலி போன்ற சிறுதானியங்களில் பொங்கல்  செய்தால்  உடலுக்கு சத்தானதாக இருக்கும்.

* அரிசி, பாசிபருப்பை தனித்தனியே வேக வைத்து பின்னர் சேர்த்து கிளறி வெல்லம் சேர்த்தால்  பொங்கல் நன்கு  குழைவாக இருக்கும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT