வெந்தயக் கீரையின் பயன்கள்...!

வெந்தயம் பொதுவாக தெற்கு ஐரோப்பாவின் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் காணப்படுகிறது.
வெந்தயக் கீரையின் பயன்கள்...!

வெந்தயம் பொதுவாக தெற்கு ஐரோப்பாவின் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் காணப்படுகிறது. தற்போது வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் கீரை மற்றும் விதைகள் இரண்டையும் நறுமணப் பொருளாக பயன்படுத்தி வருகின்றனர். வெந்தய விதை ஓர் ஊட்டச்சத்து பொருளாக பயன்படுகிறது. 

குடல் பிரச்னைகள்:  வெந்தயக் கீரை மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் அஜீரண சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரைப்பை பிரச்னைகள் மற்றும் குடல் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிப்பதில் வெந்தயக் கீரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வயிற்றுக்கடுப்பு மற்றும் வயிற்றுப்போக்கை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

வெந்தயக் கீரையை  நிழலில் காயவைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு, எலுமிச்சைச் சாறுடன் சேர்த்து 2 நிமிடங்கள் சூடுபடுத்தி  அருந்தி வந்தால் குடல் பிரச்னை குணமாகும்.

கொழுப்பு:  வெந்தயக்  கீரை ரத்த கொழுப்பு அளவில் ஒரு நம்பமுடியாத வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பெருந்தமனியின் தடிமனைக் குறைக்க உதவுகிறது. இது நமது உடலில் உள்ள குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவற்றை குறைத்து உயர் அடர்த்தி கொழுப்புப்புரதத்தை அதிகரிக்கிறது.

நீரிழிவு நோய்: வெந்தயக் கீரை, இலவங்கப்பட்டையின்  பண்புகளை ஒத்து உள்ளது. இதனால்,  நீரிழிவு நோயை எதிர்க்கும் ஆற்றல்  அதில் அதிகம் உள்ளது.  
இதயப் பிரச்னைகள் மற்றும் ரத்தக் கொழுப்புகள்: வெந்தயத்தில் மிகவும் வலுவான ஆண்டியாக்ஸிடண்ட்கள் உள்ளன. அதனால்  இதயத்தில் திடீர் ரத்தம் உறைதலுக்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இது டெங்கு உருவாக்கத்தையும்  தடுக்கிறது.

வெந்தயத் தூள் ஒரு ஸ்பூன் எடுத்து  சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து நன்கு கலந்து  முகத்தில் தடவி, பதினைந்து நிமிடங்கள் கழித்து  ஈரமான பருத்தி துணியை வைத்து துடைக்கவும். இவ்வாறு  தொடர்ந்து செய்து வந்தால்,  மங்கு போன்ற தோல் பிரச்னைகள் நீங்கும்.

உச்சந்தலையில் வெந்தய விழுதைத்  தடவி 40 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். இது போன்று வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து வந்தால் முடி நீளமாகவும் பளபளப்பாகவும் வளரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com